“தலைவரை நீக்க” அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனரா?

 

பகாங்கில் நடைபெற்ற ஓர் அம்னோ நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரை பரவி வருகிறது. அந்த உரையில் 1 sackpresidentமலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) இயக்குநர்கள் நீக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டு கசியப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த இன்னொரு சம்பவம் இப்போது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. கலந்து கொண்ட 400 க்கு மேற்பட்ட அம்னோ உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போது மகிழ்ச்சி ஆரவரம் செய்ததாக கூறப்படுவதாகும்.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று அம்னோ தொகுதி தலைவர்களை மலேசியாகினி தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து கேட்டதற்கு ஒருவர் மட்டுமே அச்சம்பவம் நடந்தது என்பதை உறுதிப்படுத்தினார். மற்றொருவர் உறுதியாக எதனையும் கூறவில்லை.

sackpresident11எம்டிபி இயக்குநர்கள் நீக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று முகைதின் யாசின் கூறிய போது பரபரப்புடன் காணப்பட்ட கூட்டத்திலிருந்து நஜிப் நீக்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த தொகுதித் தலைவர் கூறினார்.

“400 உறுப்பினர்களில் பாதிப் பேர் அதற்கு கைத்தட்டலுடன் மகிழ்ச்சி ஆரவாரமும் செய்தனர்”, என்று அவர் கூறிக்கொண்டார்.

பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1எம்டிபியின் தலைவர் அருள் கந்தா கந்தசாமி பற்றியதாகும், நஜிப்பை அல்ல என்று சிலர் கூறிக்கொண்டாலும் அது பலரால் நிராகரிக்கப்பட்டது.

அக்கூட்டத்தில், 1எம்டிபி பற்றி முகைதின் யாசின் பேசுவதற்கான திட்டம் ஏதும் இல்லை. இருந்தாலும் அவர் பேசினார், ஏனென்றால் அம்னோ உறுப்பினர்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர் என்பது அவருக்குத் தெரியும் என்று ஒரு தொகுதித் தலைவர் கூறினார்.