பொருளை வாங்கி இருப்பில் வைத்த பிறகும் ஜிஎஸ்டி-இலிருந்து தப்ப முடியவில்லை

gstஏப்ரல் 1-க்கு  முன்  முன்யோசனையுடன்  நடந்து  கொண்டார்  நான்கு பிள்ளைகளுக்குத்  தந்தையான  எஸ்.அன்பா.

“ஜிஎஸ்டி-யை  வெற்றிகொள்ள  நினைத்தேன். பொருள்களை  வாங்கி  இருப்பில்  வைத்துக்  கொண்டேன்”, என்றார்  அன்பா.

பலரையும்  போலவே  அன்பாவும்  ஆறு  விழுக்காடு  இஎஸ்டி-இலிருந்து  தப்பிக்க  பொருள்களை  நிறைய  வாங்கி  வைத்துக்  கொண்டார்.

ஜிஎஸ்டி  நடைமுறைக்கு  வந்து  இப்போது  இரண்டு  மாதங்கள்  முடியப்போகும்  நிலையில் பொருள்,  சேவை  வரி  வேறு  எத்தனையோ  வழிகளில்  தங்களைப்  பாதிப்பதைக்  குடும்பங்கள்  உணரத்  தொடங்கியுள்ளன.

மளிகைப்  ;பொருள்களின்  விலை ஜிஎஸ்டி-இன்  காரணமாக  சுமார்  10விழுக்காடு  உயர்ந்து  விட்டதாகக்  கூறுகிறார்  அன்பா.

இது  அண்மையில்  மலேசியாகினி  வாசகர்கள்  தெரிவித்ததைவிட  அதிகமாக  உள்ளது.

மலேசியாகினி  ஆய்வில்  கலந்துகொண்டவர்கள் மளிகைப்  பொருள்களின்  விலை  6.7 விழுக்காடு  உயர்ந்திருப்பதாக  சொன்னார்கள்.  ஆனால்,  ஏப்ரல்  மாத  பயனீட்டாளர்  விலைக்  குறியீடு  விலைகள் 1.8  விழுக்காடு  உயர்ந்தது  என்கிறது.

மூன்று  குழந்தைகளுக்குத்  தாயான  ஜெஸ்ஸிகா  டானும் அன்பாவைப்  போன்றுதான்  நடந்துகொள்கிறார்.

“எப்போதுமே  பொருள்களை  வாங்கி  இருப்பில்  வைத்துக்  கொள்வேன். அது  செலவைக்  குறைக்கிறது”, என்றாரவர்.

மலிவு  விலை  விற்பனை  நடக்கும்போதெல்லாம்  பொருள்களை  நிறைய  வாங்கி  வைத்துக்  கொள்கிறா  ஜெஸ்ஸிகா.

“பேரங்காடிகளில் பொருள்களை  விளம்பரப்படுத்தும்  விற்பனை  நடைபெறும்போது பொருள்  பட்டியலையும்  கொண்டு  சென்று  விலைகளை  ஒப்பிட்டுப்  பார்ப்பேன். விலை  குறைவாக  இருந்தால்  வாங்குவேன். வாங்கிய  விலைகளையும்  குறித்துக்  கொள்வேன்.

“அந்த  வகையில்தான்  செலவைக்  குறைக்கிறேன். விலகளைக்  கண்காணிக்காவிட்டால்  ஒவ்வொரு  பொருளுக்கும் ரிம3, ரிம4  கூடுதலாகக்  கொடுக்க  வேண்டி  வரும்”.

டான் விலைக்  குறைவா  என்பதைத்தான்  பார்க்கிறார்.  ‘பிராண்டு’ பார்ப்பதில்லை.

பொருள்  வாங்குவதில்  இப்படியெல்லாம்  சாமர்த்தியம்  காட்டினாலும்  குழந்தைகளின்  படிப்பு  விசயத்தில்  அவரால்  எதுவும்  செய்ய  முடியாதிருக்கிறது. டியூசன்,  போக்குவரத்துக்  கட்டணங்கள்  உயர்ந்து  விட்டன.

“வாழ்க்கைச்  செலவினம்  உயர்ந்து  விட்டதாம். அதனால்  டியூசன்  கட்டணத்தில்  ரிம 10 கூடிவிட்டது. போக்குவரத்துக் கட்டணமும்  அப்படியே. முன்பு ரிம90 ஆக  இருந்தது. இப்போது ரிம100”, என்றவர்  அங்கலாய்த்துக்  கொண்டார்.

“ஜிஎஸ்டி-ஆல்  விலைகள்  குறையும்  என்றது  அரசாங்கம்……ஆனால்  நம்முடைய வாங்கும்  சக்தி  குறைந்து  விட்டது  ரிங்கிட்டின்  மதிப்பும்  சுருங்கி  விட்டது. அப்படியானால், நமக்குக்  கிடைத்த  நன்மைதான்  என்ன?”, என்றவர்  வினவினார்.