தாயிப் மஹ்மூட்டுக்கு ரிம3.7 மில்லியன் ரோல்ஸ் ரோய்ஸ்

rollsசரவாக்  ஆளுனர்  அப்துல்  தாயிப்  மஹ்மூட்டுக்கு-   கோலாலும்பூரில்  இருக்கும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக- விலையுயர்ந்த  புதுக்  கார் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு 2012 ரோல்ஸ்  ரோய்ஸ்  ஃபெண்டம்.

அதுவே  தாயிப்பின்  அதிகாரத்துவ  காராம். அந்தரங்க  விசயங்களை   அம்பலப்படுத்திவரும்  சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  கூறியுள்ளது.

அது  சரவாக்  முதலமைச்சரான அடினான்  சாதேம்  தாயிப்புக்கு  வழங்கிய  “பரிசு”  என்று  அந்த  இணையத்தளம்  கூறிற்று.

அந்தக் காரின்  விலை  பிரிட்டனில் GBP365,000 (ரிம2 மில்லியன்)  ஆனால் மலேசியாவில்  ஆடம்பர  கார்களுக்கு  வரி  அதிகம்  என்பதால் இங்கு  அதன்  விலை  இன்னும்  அதிகமாக  இருக்கும்.

இங்கு  பயன்படுத்தப்பட்ட  2012  ரோல்ஸ்  ரோய்ஸ் ஃபெண்டம் கார்கூட ரிம3.7 மில்லியனுக்கு விலை  போவதாக  சரவாக்  ரிப்போர்ட்  தெரிவித்தது.

“பயன்படுத்தப்பட்ட  காரை  வாங்கும்  பழக்கம்  தாயிப்புக்குக்  கிடையாது”, என்றும்  அது  குறிப்பிட்டது.