1எம்டிபி: அமைச்சரவை தெரியாது என்று சொல்லித் தப்பிக்க முடியாது

raz1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) குழப்படிக்கு  அமைச்சரவை  மொத்தமும்தான்  பொறுப்பு என்கிறார்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு ரசாலி  ஹம்சா.

அவ்விவகாரத்துக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  மட்டுமே  பொறுப்பாக்குவது  சரியல்ல.

“அமைச்சரவையில்  உள்ள  அனைவருமே  அப்பிரச்னைக்குக்  கூட்டுப்  பொறுப்பேற்க  வேண்டும். யாரும்  ‘அது  உங்கள்  பிரச்னை  என் பிரச்னை  அல்ல’  என்று  சொல்ல  முடியாது”, என  தெங்கு  ரசாலி  கூறினார்.

1எம்டிபி-இல்  நடந்தது தெரியுமோ  தெரியாதோ  அமைச்சர்கள்  எல்லாருக்குமே  அதில்  பொறுப்புண்டு.

பொது  விவகாரமான  அதைப்  பற்றித் தெரியாது  என்று  சொல்லி  அமைச்சர்கள்  தப்பித்துக்கொள்ள  முடியாது.

தெரியாது  என்றால்  அமைச்சரவையில்  அதைப் பற்றிக்  கேள்வி  எழுப்பியிருக்க  வேண்டும் என்றாரவர்.

எதிரணியினரும்  இதே  கருத்தைத்தான்  சொல்லியிருக்கிறார்கள்.