Secret Recipe நிறுவனத்தின் ஹலால் சான்றிதழ் இரத்து

recepeபிரபல கேக்  தயாரிப்பு    நிறுவனமான  சீக்ரெட்  ரெசிபிக்குக்  கொடுக்கப்பட்டிருந்த  ஹலால்  சான்றிதழை மலேசிய இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்) இரத்துச்  செய்துள்ளது.

அதே  வேளையில்,  ஹலாலற்ற  பொருள்களை  அந்நிறுவனம்  பயன்படுத்தவில்லை என்பதையும்  ஜாக்கிம்  விளக்கியுள்ளது.

“சுத்தக்குறைவு, சரியான தயாரிப்புமுறை  கடைப்பிடிக்கப்படாமை  ஆகியவையே ஹலால்  சான்றிதழ்  இரத்தானதற்குக்  காரணம்.

“பொருள்  தயாரிப்பில்  ஹராமான பொருள்கள் பயன்படுத்திய  குற்றச்சாட்டுக்காக  ஹலால் சான்றிதழ்  இரத்துச்  செய்யப்படவில்லை”, என  ஜாக்கிமின் ஹலால் பிரிவு இயக்குனர்  ஹகிமா  முகம்மச்  யூசுப்  கூறினார்.