நாசிர்: 1எம்டிபி வராததை ஏற்றுக்கொள்ள முடியாது

nazirபிரதமரின்  சகோதரர்  நாசிர்  ரசாக்,  இன்று பொதுக் கணக்குக்குழுவின்  விசாரணைக்கு 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) வந்து  சாட்சியம்  அளிக்கத் தவறியதை  ”ஏற்றுக்கொள்ள  முடியாது”  எனக்  கூறினார்.

“உங்கள்  நிறுவனம்  தேசிய  நெருக்கடி ஒன்றை  உருவாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தைச்  சந்திக்க  உங்களுக்கு  நேரமில்லையா? ஏற்றுக்கொள்ள முடியாத  காரணம்”, என்றவர்  இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டிருந்தார்.

1எம்டிபி  தலைவர் அருள்  கந்தாவும்  முன்னாள்  தலைமை  செயல்  அதிகாரி  ஷாரோல்  ஹல்மியும்  வெளிநாடு  செல்ல  வேண்டிய  வேலை  இருப்பதால்  பிஏசி  விசாரணைக்கு  30-நாள்  அவகாசம்  கேட்டிருப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது  நாசிர்  இவ்வாறு  கூறினார்.

அவ்விருவரும்  பிஏசி  விசாரணைக்கு  வர  வேண்டும்  என்று  அறிவிக்கை  அனுப்பப்பட்டு  இரண்டு  வாரங்கள்  ஆகின்றன.  அனால்,   அவர்களோ  நான்கு  நாள்களுக்குமுன்தான்  அவகாசம்  தேவை  என்று  கோரிக்கை  விடுத்திருக்கிறார்கள்.