ஜிஎஸ்டி-யால் சில கடைகள் மூடப்பட்டது உண்மையே

OLYMPUS DIGITAL CAMERAபொருள், சேவை  வரி  கொண்டுவரப்பட்ட  பின்னர்  சில  கடைகள், குறிப்பாக  வயதானவர்களால் நடத்தப்பட்டுவந்த  கடைகள்  மூடப்பட்டதை  நிதி  அமைச்சு  ஒப்புக்கொண்டது.

“ஆனால், அவை  மூடப்பட்டதற்கு  ஜிஎஸ்டிதான்  முக்கிய  காரணம்  என்று  சொல்ல  முடியாது”.  நேற்று  நாடாளுமன்றத்துக்கு  வழங்கிய  எழுத்துப்பூர்வமான  பதிலில்  அமைச்சு  இவ்வாறு  கூறியது.

“அவை  வயதானவர்களால்  நடத்தப்பட்டுவந்த  கடைகள். அவற்றைத்  தொடர்ந்து  நடத்த  வாரிசுதாரர்கள்  இல்லாதது  ஒரு  காரணம்”, என  லிம்  குவான்  எங்(டிஏபி- பாகான்)-கின்  கேள்விக்கு  அது  பதலளித்தது.

சம்பந்தப்பட்ட கடைகள்  ரிம500,000-க்குக் குறைவான  வருமானத்தைப்  பெற்று  வந்தவை  என்பதையும்  அமைச்சு  வலியுறுத்தியது.