ரபிஸி: பிஏசி நஜிப்பை விசாரணைக்கு அழைக்க வேண்டும்

ramli1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  சர்ச்சைக்குரிய நிதிச்  செயல்பாடுகள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  இணக்கத்தின்பேரில்தான்  நடந்துள்ளன  என்பதால்  பொது  விசாரணைக்  குழு  பிரதமரை  விசாரணைக்கு  அழைக்க  வேண்டும்  என்கிறார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி ரம்லி.

1எம்டிபி  நிறுவனத்துக்கு  முன்பிருந்த  திரெங்கானு  முதலீட்டு  நிறுவன (டிஐஏ)த்தின்  அமைப்பு  விதிக் குறிப்புகள்  எல்லாச்  செயல்பாடுகளும்  பிரதமரின்  சம்மதத்தைப்  பெற்றிருக்க  வேண்டும்  என்று  கூறுவதை  மலேசியாகினி  நேற்று வெளிப்படுத்தியிருந்ததை  அடுத்து  ரபிஸி  இவ்வாறு  கூறினார்.

“எல்லாம்  அவருக்குத்  தெரிந்தே  இருக்க  வேண்டும்  என்பது  தெளிவாகத்  தெரிகிறது. அது( நஜிப்பின்  சாட்சியம்) 1எம்டிபி தவறாக  வழிநடத்தப்பட்டது அவருக்குத் தெரியுமா இல்லையா  என்பதைத் தெளிவுபடுத்திவிடும்.

“நஜிப் ஒன்றிரண்டு  நாள்களை  ஒதுக்கிக்கொண்டு  நாடாளுமன்றத்துக்கு  வந்து  விளக்கமளிப்பது  நல்லது”, என்றாரவர்.