பிஎசி: 1எம்டிபி விசாரணைக்கு பிரதமரும் அழைக்கப்படலாம்

 

pactocallpm1நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு (பிஎசி) அதன் 1எம்டிபி மீதான விசாரணைக்கு அழைக்கப்பட்ட 1எம்டிபியின் அதிகாரிகளுக்கு மிகக் குறுகிய கால அவகாசமே கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை அக்குழுவின் தலைவர் மறுத்தார்.

பிஎசியின் விசாரணைக்கு பிரதமர் நஜிப்பும் அழைக்கப்படலாம் என்று அக்குழுவின் தலைவர் நூர்   ஜஸ்லான் முகமட் மேலும் கூறினார்.

1எம்டிபி மீதான விசாரணையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அதன் தலைவர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஷாருல் ஹல்மி ஆகியோருக்கான அழைப்பு மே 6 இல் அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அழைக்கப்படும் சாட்சிகளுக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்படுவதில்லை. அவர்கள் சார்ந்துள்ள அமைச்சுக்கு அனுப்பப்படுகிறது. “நாங்கள்pactocallpm2 போதுமான, இரண்டு வாரத்திற்கும் கூடுதலான, கால அவகாசம் கொடுத்திருந்தோம்”, என்று நூர்   ஜஸ்லான் விளக்கினார்.

1எம்டிபியின் கணக்காய்வாளர்கள் விசாரிக்கப்பட்ட பின்னர், அருளும் ஷாரோலும் மீண்டும் அழைக்கப்படுவர் என்றாரவர்.

பிரதமர் நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்று கேட்ட போது, குழு அது குறித்து முடிவு செய்யும் என்றார்.

“பொறுமை காக்க வேண்டும். நாங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுப்போம். முதலில் கண்காணி அதிகாரிகள், அடுத்து நிர்வாகத்தினர், பின்னர் கணக்காய்வாளர்கள், அதன் பின்னர்தான் வாரியம் அழைக்கப்படும்.

“அனைத்து தகவலும் பெற்ற பின்னர்தான் அடுத்து யாரை அழைப்பது என்று முடிவெடுக்க முடியும், அதில் பிரதமரும் அடங்கலாம்”, என்றார் நூர் ஜஸ்லான்.