10வது திட்டத்தில் 40 விழுக்காடு நிறைவேற்றப்படவில்லை

kassimபத்தாவது  மலேசிய  திட்டத்தில்  விவரிக்கப்பட்ட  திட்டங்களில்  சுமார் 40 விழுக்காடு  இன்னும்  முழுமையாக அமலாக்கப்படவில்லை.

10வது  மலேசிய  திட்டம்  சாதித்தது  என்ன  என்று  அறிந்துகொள்ள  விரும்பிய  ரந்தாவ்  பாஞ்சாங்  எம்பி-க்குப்  பிரதமர்துறை இவ்வாறு  எழுத்துப்பூர்வமாக  பதில்  அளித்துள்ளது.

10வது  மலேசியத்  திட்டத்தின்படி  இவ்வாண்டு  மே   11வரை  11,894 திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டிருக்க  வேண்டும்  என  பிரதமர்துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்  கூறினார்.

இவற்றில் 61.5 விழுக்காட்டுத் திட்டங்கள்  நிறைவேற்றி  முடிக்கப்பட்டுள்ளன. 38.5 விழுக்காடு  “அமலாக்கத்தின்  பல்வேறு  கட்டங்களில்  உள்ளன”.

“எஞ்சியுள்ள  38.5 விழுக்காட்டுத்  திட்டங்களும்  அடுத்த  ஐந்தாண்டுகளில்  முடிக்கப்படும்”, என  ஷாஹிடான்  தெரிவித்தார்.