பாஸ் எம்பி: ஹுடுட் அரசமைப்புக்கு உட்பட்டது

pasஹுடுட்  சட்டம்  அரசமைப்புடன்  ஒத்துப்போக  வேண்டும்  என்ற கூட்டரசு  அரசாங்கத்தின்  நிலைப்பாடு,  அது  அந்த  இஸ்லாமிய  சட்டத்தை  ஆதரிக்கவில்லை  எனப்  பொருள்படாது.

“ஏனென்றால்  ஹுடுட்  அரசமைப்புக்கு  ஏற்புடையதே”, என்கிறார்  தகியுடின் ஹசான்(பாஸ்-  கோத்தா  பாரு).

கிளந்தான்  அரசு, மாநிலச்  சட்டங்கள்  எல்லாமே, 22  ஆண்டுகளுக்குமுன்  கொண்டுவரப்பட்ட  கிளந்தான்  ஷியாரியா  குற்றவியல்  சட்டம் உள்பட, அரசமைப்புக்கு  இசைவாக இருப்பதை  உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது  என்றார்.

“ஹுடுட்  அரசமைப்புக்கு  எதிரானது  என்று  நீதிமன்றம் இதுவரை  தீர்ப்பளித்ததில்லை”, என  நாடாளுமன்ற  வளாகத்தில்  சந்தித்தபோது  அவர்  சொன்னார்.

ஹுடுட்மீது  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படும்போது  அம்னோ  என்ன  செய்யும்  என்று ஏதாவது  அறிகுறி  தெரிகிறதா  என்று  வினவியதற்கு, “அவர்கள்  ஆதரிப்பார்கள்போலத்  தெரிகிறது”, என தகியுடின்  கூறினார்.

அப்துல்  ஹாடி  ஆவாங்(பாஸ்- மாராங்) அதைக்  கொண்டு  வரும்போது  அதைப்  பரிசீலிப்பதாக  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியாவும்  வாக்குறுதி  அளித்திருக்கிறாராம்.