பெர்காசா: 11எம்பி-இல் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் அதிகமாக ஒன்றுமில்லை

aliபிரதமரால்  கடந்த  வாரம்  தாக்கல்  செய்யப்பட்ட  11வது  மலேசிய  திட்டம்  மலாய்க்காரர்களுக்கும்  பூமிபுத்ராக்களுக்கும் குறிப்பிட்ட  வியூகங்களையோ  திட்டங்களையோ  கொண்டிருக்கவில்லை  என்பதால்  அதை  நிராகரிப்பதாக  மலாய்  என்ஜிஓ-வான  பெர்காசா  கூறியுள்ளது.

ஒரு  வாரகாலம்  அந்த  என்ஜிஓ-வின்  பொருளாதாரப்  பிரிவு  அத்திட்டத்தை  ஆராய்ந்து  பார்த்ததில்  நாட்டின் பெரும்பான்மை  மக்களுக்கு அதில்  பொருளாதார  வியூகம்  எதுவும்  வலியுறுத்தப்படவில்லை  என்பதைக்  கண்டறிந்ததாக  அதன்  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

“திட்டத்தில்  மலாய்க்காரர்/ பூமிபுத்ராக்கள்  பற்றித்  தனியே வலியுறுத்தாமல்  போனால் சமுதாய  சீரமைப்பு  போன்று  அவர்களுக்குரிய  திட்டங்களுக்குக்  கொடுக்கப்படும்  முக்கியத்துவம்  குறைந்து  போகலாம்.

“அரசாங்கம்  தெக்குன்,  அமனா  இக்தியார்  நிதிகளை  எல்லா  இனங்களுக்கும்  திறந்து  விட்டிருப்பதை  ஆதரிக்கிறோம். ஏனென்றால்  பூமிபுத்ரா- அல்லாதாரில்  உதவி  தேவைப்படுவோரும்  இருக்கவே  செய்கிறார்கள்.

“ஆனால்,  பூமிபுத்ராக்கள் பொருளாதாரத்தில்  அவர்களின்  பங்கைப்  பெறுவதில்  இன்னும்  பின்தங்கியே இருக்கிறார்கள்”, என்று  இப்ராகிம்  சொன்னார்.