நஜிப் பதவியில் தொடர்ந்து இருக்க அவர் ஆறு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்

 

najib to continue in powerபிரதமர் நஜிப் தமது தவணைக் காலம் வரையில் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மூத்த ஊடகவியலாளரான காடிர் ஜாஸின் கூறுகிறார்.

அந்த ஆறு நடவடிக்கைகள்:

1. துணைப் பிரதமர் முகைதின் யாசின் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷாப்பி அப்டெல் போன்ற பகைமைப் போக்குடைய அமைச்சர்களை அகற்றி விட்டு அமைச்சரவைவில் மாற்றங்கள் செய்ய வேண்டும்;

2. உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியை துணைப் பிரதமராக்க வேண்டும். நிதி அமைச்சை சொந்தக்காரரும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஹிசாமுடினிடம் கொடுத்து விட வேண்டும். ஸாகிட் பாதுகாப்பு அமைச்சையும் கவனித்துக் கொள்ளலாம்;

3. உள்துறை அமைச்சை அவர் (நஜிப்) எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான்  அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரப்போகிறது என்ற தகவல் கிடைத்ததும் அவர் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்ய முடியும்;

4. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை மட்டம் தட்டுவதற்கு திறமை வாய்ந்த மொட்டைக் கடிதம் எழுதுபவரை வேலைக்குkadir அமர்த்திக்கொள்ள வேண்டும். சிறையிலிருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அதற்கு முகவுரை எழுதலாம். அதற்காக அவருக்கு சிறையிலிருந்து சில நாள்களுக்கு விடுப்பு அளிக்கலாம்;

5. சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேயிலை அகற்றி விட்டு அவரிடத்தில் அம்னோ வழக்குரைஞர் முகமட் ஹபாரிஸான் ஹருனை அமர்த்த வேண்டும்; மற்றும்

6. 1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் கடன்களை தீர்க்க வணிகர் ஜோ லோ மூலமாக 1எம்டிபியின் சொத்துகளை அவரது அராபிய நண்பர்களிடம் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் 1எம்டிபியின் சொத்துகள், மிக மலிவான விலைக்கு அரசாங்கம் வாங்கிய அதன் நிலங்கள் மற்றும் சந்தை விலைக்கு கூடுதலாக கொடுத்து அது வாங்கிய சுயேட்சை மின் உற்பத்தி நிலையங்கள் உட்பட, அந்நியருக்கு சென்று விடும்.

நஜிப்பின் நிச்சயற்ற நிலைமையின் காரணமாக அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காடிர் அவர் வலைத்தளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.