ஹுடுட் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட பண்டிகாரை கெராக்கான் சாடியது

gerakகிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமலாக்குவது  மீது  பாஸ்  கட்சியின்  தனி  உறுப்பினர்  சட்டவரைவை  பரிசீலனைக்கு  ஏற்றுக்கொண்டிருக்கும்  மக்களவைத்  தலைவருக்கு  கெராக்கான்  இளைஞர்  பிரிவு  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டிருக்கிறது.

“நாடாளுமன்றத்தில்  எதிரணி  உறுப்பினர்கள்  கொண்டுவந்த  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  எதுவும்  ஏற்றுக்கொள்ளப்பட்டு  விவாதிக்கப்பட்டதாக  வரலாறு  இல்லை.

“இப்போது  அதை  அனுமதிப்பார்களானால்  ஏதோ  சரியில்லை  என்றுதான்  அர்த்தமாகும்”, என கெராக்கான்  இளைஞர்  துணைத்  தலைவர்  எண்டி  டோங்  கூறினார்.

எந்தச்  சட்டவரைவும்  கூட்டரசு  சட்டங்களுடன்  ஒத்துப்  போகவில்லை  என்றால்  அது  நிராகரிக்கப்பட  வேண்டும்  என  நாடாளுமன்ற  நிலை ஆணைகள்  பகுதி 49(2)  கூறுவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.