பிரதமர் வரவில்லை; நிகழ்வின் நாயகனாக மாறினார் மகாதிர்

no-showஇன்று  காலை  புத்ரா உலக  வாணிக  மையத்தில் பிரதமருடனான  கலந்துரையாடலில் சூடான  வாதத்தையும்  எதிர்வாதத்தையும்  எதிர்பார்த்து  பெருங்  கூட்டம்  கூடியிருந்தது. அதற்காகவே  வந்தவர்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டும்  காலை 8.50-இலிருந்து  அங்கு காத்திருந்தார்.

ஆனால், போலீஸ் பாதுகாப்பு  காரணங்களுக்காக “ஒளிப்பதற்கு  எதுவுமில்லை” என்ற  அந்நிகழ்வை  இரத்துச்  செய்யுமாறு  கேட்டுக்கொண்டனர்.

முதலில்  செய்தியாளர்கள்  அந்நிகழ்வுக்கு  அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி  ஏற்பாட்டாளர்களுடன்  பேச்சு  நடத்திய  பின்னர்  அனுமதிக்கப்பட்டனர்.

நஜிப்  கலந்துகொள்வதை  போலீசார்  தடுத்துவிட்டதாகவும்  அதனால்  நிகழ்வு  இரத்துச்  செய்யப்படுவதாகவும்  அறிவிக்கப்பட்டதும்  கூட்டத்தினர்  ஏமாற்றம்  அடைந்தனர்.

அவர்களை  அமைதிப்படுத்த  மகாதிர்  மேடையேறினார். ஆனால், அவர்  பேசுவதை  போலீசார்  தடுத்தனர். இதனால்  கூட்டத்தினரின்  ஆத்திரம்  அதிகரித்தது.

மகாதிர்  மேடையிலிருந்து  இறங்க  ஒப்புக்கொண்டு   செய்தியாளர்களிடம்  பேச  அனுமதி  கோரினார்.

பின்னர்  மகாதிர்  செய்தியாளர்களைச்  சந்தித்த   மகாதிர் இதற்குமுன்னர்  1எம்டிபி பற்றி தாம்  சொல்லிய  அனைத்தையும்  திரும்பவும்  எடுத்துரைத்தார்.

ஒரு  கேள்விக்குப்  பதிலளித்த  மகாதிர்  1எம்டிபி  பற்றி விளக்கமளிக்க  நல்ல  வாய்ப்பு  கிடைத்தது, நஜிப்  அதைத்  தவற  விட்டுவிட்டார்  என்றார்.

காலை  மணி  11.07-க்கு மகாதிர்  அங்கிருந்து  புறப்பட்டார். கூட்டத்தினர் ‘ஹிடுப்  துன்’  என்ற  முழக்கத்துடன்  அவரை  வழி  அனுப்பி  வைத்தனர்.