ரிங்கிட்டின் சரிவுக்கு மகாதிரே காரணம்: அஹ்மட் மஸ்லான் குற்றச்சாட்டு

ahmadரிங்கிட்  கடந்த  ஒன்பதாண்டுகளில்    மிக  மோசமான  அளவுக்கு  மதிப்புக்  குறைந்திருப்பதற்கு  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்மீது  குறைகூறி வருவதுதான்  காரணமாம்.

இவ்வாறு  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  தெரிவித்ததாக  உத்துசான்  மலேசியாவின்  வார இறுதிப்  பதிப்பான  மிங்குவான்  மலேசியா  அறிவித்துள்ளது. இவ்வாரம்  டாலருக்கு  எதிராக ரிங்கிட்  3.73ஆகக்  குறைந்தது.

“டாக்டர்  மகாதிர்  முன்வைக்கும்  விவகாரங்களும்  அவற்றுக்குச்  சில  தரப்பினரின்  ஆதரவும்  ரிங்கிட்டின்  மதிப்புக் குறைவுக்குக்  காரணமாகும்”.

நேற்று  பொந்தியானில்  கிராமத் தலைவர்கள் கலந்துகொண்ட  கூட்டத்தில் பேசிய  அஹ்மட்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறுவதை  நிறுத்தும்படி  மகாதிரைக்  கேட்டுக்கொண்டார்..