தமிழர்களின் – 11 மலேசிய கடைசி திட்டமும் 2020 இண்டியர்கள் ஏழ்மையும் !.

contentwriting_1தமிழகம் நாம் தமிழர் தமிழர் நாட்டின் தமிழர் அரசியல் நகர்வு மாநாடு, பிறகு தமிழர் களம் நமது வேர்கள் கூட்டங்களில் கலந்து நேற்று மலேசியாவில் தமிழ்ப்பள்ளி தொடங்கி 200 ஆண்டுகள் விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் தவித்துபபோனேன்.

விவேகானந்தா ஆசிரமத்தை அநாதை ஆக்கும் முயற்சியில் உள்ளவர்கள் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் 200 ஆண்டு விழாவில் மரம் நடுவது கேள்விப  பட்டு என் வண்டியை அப்படியே என் தமிழ் குரல் சங்க PT 3 தமிழ் வகுப்புக்கு போய் விட்டேன்.

ஏன் இந்த நீண்ட வியாக்கினம் என்று நீங்கள் புலம்புவது தெரிகிறது.

பிரதமர் துரையின் செடிக் கொண்டுவந்த 10 கோடி நிதியும்  அதில் ஆரவாரமாக ஆர்வமாக் கலந்துக்கொண்ட “இண்டியன்களையும்” பத்திரிக்கையில் பார்த்தேன். அதில் INTAN எனும் மலேசிய அரசு ஆய்வு கழகம் Indian எத்னிக் இயக்குனர் முன்னாள் YSS CEO என்றும் சொல்லலாம் DR ஜெயசூரியாவும் கலநத்துககொண்டார் என்று அறிந்தேன்.

மலேசியா புதிய பொருளாதார கொள்கை NEP ஆரம்பித்து இதோடு 11 முறை அதாவது 55 ஆண்டுகள். 2020 வளர்ச்சி நாடாக இதுதான் கடைசி ஐநதாண்டு திட்டம். அன்றே நமக்கு 3.5 % சொத்துரிமை தேவை என்று பல நிபுணர்கள் சொன்னார்கள். அதற்கு 1000கும் மேற்பட்ட ஆய்வு ஆப்பு அரங்குகள் நடத்தினார்கள். சாமிவேலு தலைமையில் பொருளாதர அலை 1, 2 டும் நடந்தது.
இன்று எல்லாத்துக்கும் ஆணி அடித்துவிட்டு 11வது பொருளாதார பரிந்துரை என்று மீண்டும் மக்களிடம் சந்திப்பு நடத்தி உள்ளார் தென்னாடுகளுக்கு தொடர்பு பொறுப்புள்ள அசாமி.

நான் கேற்பதெல்லாம் 3. 5 %சொத்துரிமைய எட்டுவதற்கு நமக்கு தேவையான நிதி அல்லது சொத்து அல்லது பங்கு சந்தை monetary value என்பார்கள் RM எவ்வளவு?

என் ஆய்வுப்படி RM 12 பில்லியன் எட்டினால் மட்டுமே இந்த நாட்டின் வளர்ந்த சமுதாயத்தின் மடியில் உறங்கலாம் அல்லது மஜீத் இண்டியா சந்தடியா என்று கேள்வி கேற்க, நிதி வாங்க  எந்த குள்ள நரியையும் காணோம். 10 கோடி வசூல் என்றதும் வங்காளி மலையாளி தெலுங்கர் எல்லாம் இன்டியனாயிட்டார்களே !

ஒரு வேளை INTAN அதிகாரிக்கு இந்த 12 பில்லியன் தேவை தெரியும். ஆனாலும் அது மழுப்பி உழப்பிதான் இந்த 10 கோடி பிச்சையும் வந்திருக்கும். காரணம் ஒரு இனத்தின் அரசு Intan Ethenic அதிகாரி என்றால் அது ஓம்பா பெருசுங்க ! அவர் கூட செடிக் கூட்டத்தில் பல ஆலோசனைகளை வழங்கினாராம். ஆனால் யாருக்கும் விளங்க வில்லை சுய சரிதம் குணா படப்பாடல் பல்லவிதானாம்!

பிரதமர் சலுகைபபடி 2015கு 10 கோடி என்றால் 2020ககுள் 50 கோடி வரும் என்று வைத்துக்கொண்டாலும் நமது சொத்துரிமை தேவை படி RM 12 பில்லியன் என்பது 1200 கோடியாகும்.

இப்போது புரிகிறதா ஐயா காத்தையா கொட்டிய கொட்டு. இதோ மீண்டும் சுவாசிப்போம் …….அந்த அவரின்  15/6 15 செய்தியின் ஈர காற்றை முடிந்தால் திமிறி எழுங்கள்……. !

“பிரதமர் நஜிப் ரசாக் 11 ஆவது மலேசிய திட்டத்தை மே 21 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திட்டத்தின் இறுதிக் கட்டமான 2020 இல் மலேசிய ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியைப் பெறும் போது அதன் குடிமக்களாகிய இந்தியர்களும் மேம்பாடு கண்டவர்களாக வேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் 11 ஆவது மலேசிய திட்டத்தில் இடம் பெற்றுள்ளனவா?”

…..நமது சொத்து சொத்தையை பேசும் எந்த அறிவாளியும் நமக்கு ringgit மதிப்பீட்டை சொல்லவில்லை ஏன்? 3.5 % சகிதம் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும். தெரிந்தவர்கள் எழுதலாம்.

ஒரு நேரத்தில் 2011 என்று நினைக்கிறேன் முன்னாள் பிரதமர் துறை துணை அமைச்சர் தேவமணி  PNB பங்குக்கு 2.5 பில்லியனை இண்டியனிடம் குறிப்பா தமிழர்களிடம் sales பண்ணி 20மில்லியனை ஸ்ரீ கு முருகனுக்கு சன்மானம் பெற்றார்.

இங்கே நான் இந்தியன் என்ற பசப்பு வார்த்தையை இண்டியன் என்று மாற்றக்காரணம் இந்தி என்பது வட நாட்டவர்கள் மொழி அந்த இந்தியனில் இல்லாலம்ல் தமிழர்கள் தவறாக நமது அப்பாக்கள் வாங்கி வந்த வரம் என்பதால் அவனிடமிருந்து தமிழனாக அல்லது இண்டியனாக பிரிந்து என் ஆய்வுப்படி மலேசியா தமிழர்களின் 93% சகிதம் தமிழர்களின் சுமார் 1000 கோடியை 2020ககுள் (RM 10 பில்லியனை) எங்கு எப்படி பெறுவது என்று நமது பிரதமரை கேளுங்கள். அவர் பிரித்தாளும் இண்டியனின் Indian இன விரிசல் நம் தமிழர்களின் உயர்வை விதைக்கட்டும்.

கழகம் பிறந்தால் வலு பிறக்கும். வலியும் வழியும் நாம் கடந்து வந்த காட்டுபபாதைகள்தாம். இது தமிழன் டெலிமா அல்ல, தெளிவு !

மீண்டும் வருவேன் ..ஓய்வுக்கு நன்றி தமிழா !

-பொன்.ரங்கன்