தந்தையர் தினம் (June 21)

download-2தந்தையர் தினம் (June 21)

June 21, 2015  

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கௌரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையிலும் வேறுநாடுகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையரைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.
நாட்டுக்கு நாடு தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், ‘தந்தையர் தினம்’ என்ற அந்த நாள் உணர்வுபுர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.
மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் இணைந்து செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.
தந்தையர் தினம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விக்கு, பலவிதமான பதில்கள் காத்திருக்கின்றன. அமெரிக்கா நாட்டின், மேற்கு வேர்ஜினியாவில் 1908 ஆம் ஆண்டு தந்தையர் தினம் ஆரம்பமானது என்று ஒரு சிலரும், வாஷிங்டனில் உள்ள வான்கூவர் நகரத்தில் தந்தையர் தினம் முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்று சிலரும் சொல்கிறார்கள்.
சிக்காகோ நகரின் ‘லயன்ஸ் கழகத்தின்’ தலைவரான ஹாரிமீக் என்பவர் தந்தைகளைப் போற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பலதரப்பட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் என்றும், அதன் காரணமாக அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அமெரிக்க லயன்ஸ் கழகம் அவருக்கு ‘தந்தையர் தின நிறுவனர்’, என்று பட்டமளித்ததாகவும் வரலாற்று குறிப்பு உண்டு.
எது எப்படி இருப்பினும், ‘தந்தையர் தினம்’ என்ற ஒரு தினம் ஏற்படுத்தப்படுவதற்கான அடிப்படைக் காரணமாக விளங்குவது ஓர் ஆணின் கடமையால், நன்றி கொண்ட ஒரு பெண்தான் என்பதனை வரலாறு பதிவு செய்துள்ளது
1909 ஆம் ஆண்டளவில் வாஷிங்டனில் உள்ள ஸ்போகேன் (ளுPழுமுNநு) நகரின் எபிஸ்கோ தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்னையர் தினம் கொண்டாடப்படுவது, அப்போதுதான் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேவாலயத்தில் அன்னையரின் சிறப்பு தொடர்பான மறையுரை நடைபெற்றுக் கொண்ட நிலையில் அமர்ந்திருந்து பிராத்தித்துக் கொண்டிருந்த வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட்டுக்கு அந்த மறையுரைகளை கேட்டு தாயின் நினைவுகளுக்கு மாறாக தன் தந்தையின் ஞாபகங்கள் அவள் இதயத்தை தொட்டது
அவள்; மிகச்சிறு வயதாக இருந்த போதே அவளது தாயார் இறந்து விட்டாள். அவளையும், அவளது ஐந்து images (5)சகோதரர்களையும் அன்புடன் பராமரித்து, தாயின் ஸ்தானத்தில் இருந்து அன்புகாட்டி தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் வளர்த்து வந்தது அவளது தந்தையார் தான். அவளது தந்தையின் பெயர் வில்லியம் ஜக்ஸன் ஸ்மார்ட் (றுடைடயைஅ துயஉமளழn ளுஅயசவ)
தன்னையும் தனது சகோதரர்களையும் வளர்ப்பதற்கு, தம் தந்தை பட்ட கஷ்டங்களெல்லாம் அந்த மகளின் மனதை மீண்டும், மீண்டும் உருக்கின. தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை – என்ற எண்ணம் திருமதி சோனோரா ஸ்மார்ட் டோட்டுக்கு ஏற்பட்டது
அவள் தன் எண்ணத்தை செயலாற்றத் துணிந்தாள்.
கிறிஸ்தவ தேவாலயத்தின் ஊடாக, மதகுருமார்கள் ஊடாக, திருமதி சொனாரா டொட் அவர்கள் தனது பிரச்சாரத்தை, பரப்புரையை ஆரம்பித்தார். ஸ்போக்கேன் நகர பிதாவும், கவர்னரும், திருமதி டொட் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அறிக்கைகளை விடுத்தார்கள்.
வாஷிங்டன் நகர், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை, தந்தையர் தினமாக பிரகடனப்படுத்திக் கொண்டாட ஆரம்பித்தது.
மேற்கத்தைய நாடுகளில் தந்தையர் தினம் ஓர் அவசியமான தினமாகப் பரிமாணம் எடுத்துள்ளதோடு, வியாபார ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நமது முன்னோர்களால் தந்தையின் கடமைகள் குறித்து திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் இந்தத் தருணத்தில் நினைவு கூருவோம்.
‘தந்தை மகற்காற்று நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல் – (குறள்-67) என்ற குறள் மூலம் தந்தையானவன், தனது மகவுக்கு செய்ய வேண்டிய முதற்கடமை, அவனை கல்வியில் சிறந்தவன் ஆக்குதலே என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
ஒரு தந்தை, தனது மகனை செல்வனாக்குவதிலும் பார்க்க, அவனை கல்விமானாக்குவதே சிறந்தது என்பது இக்குறளின் உட்கருத்தாகும். தந்தையின் இந்த முதற் கடமையை நாம் புறநானூறிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. பொன்முடியார் பாடிய இப்பாடல் ஒரு மறக்குடித்தாயின் மனநிலையை கூறுவது போல் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாக அமைகின்றது.
‘மகன் தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும்
சொல்’ – குறள் 70-
தான் பிறந்ததில் இருந்து, தன்னை வளர்த்துக் கல்வி கற்க வைத்து, உலகில் பிழைப்பதற்கு ஒரு தொழிலில் பயிற்று, மணம் செய்வித்து இல்லறத்தில் இருத்தி, தனது தேடலிலும், ஒரு கூறளித்த தன் தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கைம்மாறு என்ன!
மகன் செய்ய வேண்டிய கைம்மாறு ‘இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல். அதாவது மகனின் அறிவாற்றலையும் நற்குண, நற்செயல்களையும் கண்டவர்கள், இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்று வியந்து கூறுகின்ற சொல்லை பிள்ளைகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
father39s-day-source3இன்றைய அவசர உலகில் நாம் இவற்றை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து நம் தந்தையருக்கு தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா? என்ற கேள்வியை நம்முள் நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற் பணியாகும்.
புலம்பெயர் நாடுகளில் பல வயோதிபத் தந்தையர்கள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது. நமது கலாச்சாரத்தில் மேற்கத்தைய கலாச்சாரங்கள் புகுந்தமை தவிர்க்கமுடியாததாக இருந்தாலும் நாம் நம் நாடுகளில் வாழ்ந்த அன்றைய காலகட்டத்தில் நம் தந்தையர்கள் நம்மை எப்படி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதை மறந்து இங்கு நம் குடும்பங்கள் அவர்களுக்கு வரும் அரச உதவிகளில் மட்டுமே குறியாக நிற்பதுடன் அதனைக் கூட அவர்களுக்கு செலவிடுபவர்கள் எத்தனை பேர்……? அவர்களது முதுமைக்காலத்தில் அவர்களது செயற்பாடுகள் முடக்கப்பட்டு உடலும் உள்ளமும் உறவுகளுடன் உரையாட பாசத்தில் நனைய விளையும் போது நாம் அவற்றை அவர்களுக்கு வழங்கியுள்ளேமா? இந்த வினாக்களுக்கு விடைகள் எம்மிடமே உள்ளன.
இன்றைய உலகில் ஆணும் பெண்ணும் சரிநிகராக தங்களது கடமைகளை செய்து வரும் நிலையில் பிள்ளைகள் மத்தியில் தந்தைக்குரிய மதிப்பினை தாயாரே எடுத்துச் சொல்லவேண்டும். குடும்பத்தில் இருவருமே உழைத்து வாழ்க்கையை நகர்;த்திச் செல்வதால் பலர் தந்தையர் ஸ்தானங்களின் பொறுப்புக்களை உணர்ந்து குடும்பத்தை சுமந்து சென்றாலும் பிள்ளைகள் அவற்றைப் புரிந்து கொண்டு தந்தைக்குரிய மதிப்பையும் குடும்பத்திற்கான அவரது உழைப்பையும் புரிந்து கொள்வதில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் நிலவி வருகின்றன. தந்தையின் மகத்துவத்தை பிள்ளைகளுக்கு உணர்த்துவதில் தாயாரின் பங்கு முக்கியம் பெறுகின்றது.
இன்றைய நாளில் அனைவரும் நமக்கு உயிர்கொடுத்த தந்தையர் தம் மகத்துவத்தை உணர்ந்து வாழும் போதே அவர்களை மனமகிழ்ச்சியுடன் வாழ வைக்க திடசங்கற்பம் பூணுவோமாக. இன்றைய தினத்தில் மட்டுமல்ல என்றுமே எம் தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதிருத்திக் கொள்வோம்.