பழனிவேல் மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது, நஜிப் காட்டம்

 

najib flays palaniveluமஇகாவில் ஏற்பட்டுள்ள சச்சரவுக்கான உண்மையைத் திரித்து மற்றவர்களை அதில் உட்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலை பிரதமர் நஜிப் கடிந்து கொண்டார்.

நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகா உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போது பழனிவேல் தெரிவித்த கருத்துகளுக்காக தாம் அவரை அழைத்து விளக்கம் கோரப் போவதாக பாரிசான் தலைவருமான நஜிப் இன்று டிவிட் செய்துள்ளார்.

பழனிவேல் ஆற்றிய அந்த உரையில் பாரிசான் மற்றும் நஜிப் ஆகியோரின் தலையீட்டினால்தான் கட்சிக்குப் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது என்றார்.

2,760 கிளைத் தலைவர்கள் உட்பட, 5,000 பேராளர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில் பேசிய பழனிவேல், 2103 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சி தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என்று அதிருப்தி கொண்டவர்கள் மஇகா மீது கொடுத்த அழுத்தத்தில் பாரிசான் தலையிட்டது. அதில் பிரதமரும் கூட சம்பந்தப்படுத்திக் கொண்டார் என்றார்.

“Indian community is ostracised…”

மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேலுக்கு எதிராக பாரிசானும் அதன் தலைவர் நஜிப் ரசாக்கும் களம் இறங்கியிருப்பதாக கூறப்படுவதற்கு பழனிவேல் மஇகாவின் தலைவராக பதவி ஏற்ற 13 ஆவது நாள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அதில் தமக்கு சந்தேகமே இல்லை என்று அவர் கூறியிருந்து ஒரு காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

“Indian community is ostracised. I have no doubt about it”என்று பழனிவேல் அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறியது மலேசியாகினையை தவிர வேறு எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.