‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று ஆசிரியர் ‘ஜோக்’ அடித்தாராம்: எக்ஸ்கோ, போலீஸ் விளக்கம்

tajulகெடா  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஒருவரும்  போலீசாரும்,   மாணவர்களிடம் ‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று  கூறிய  ஆசிரியரைத்  தற்காத்துப்  பேசியுள்ளனர். அவர்  வேடிக்கையாகச்  சொன்னதை  மாணவர்கள் விபரீதமாகக்  கருதி  விட்டனராம்.

அந்த  ஆசிரியர்  முஸ்லிம்  மாணவர்களிடம்  நோன்பிருக்க  வேண்டியதன்  அவசியத்தை  வலியுறுத்தி முஸ்லிம்- அல்லாத  மாணவர்களிடம்  முஸ்லிம்  மாணவர்களின்  முன்னிலையில்  தண்ணீர்  அருந்த  வேண்டாம்  என்று  சொன்னதாக  ஆட்சிக்குழு  உறுப்பினர்  தாஜோல் உருஸ்  மாட்  ஜைன்  கூறினார்.

அதன்  பின்னர்  அவர், முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  வகுப்பாசிரியர்  அனுமதியுடன்  வகுப்பறைக்கு  வெளியில்  சென்று தண்ணீர்Drinking urine1  அருந்தலாம்  என்று  கூறியிருக்கிறார். அத்துடன்  வேடிக்கையாகக்  கழிப்பறையிலும்  அருந்தலாம், “ஆனால்,  உங்கள் சிறுநீரை  அருந்தி  விடாதீர்கள்”  என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

“இதை  மாணவர்கள்  சிலர்  தப்பாக  புரிந்து  கொண்டார்கள். அதனால்  இது  ஒரு  விவகாரமாக   மாறியுள்ளது. போலீஸ்  புகார்களும்  செய்யப்பட்டுள்ளன”, என்று  எக்ஸ்கோ  அறிக்கை   விடுத்திருக்கிறார்.

கோலா  மூடா  மாவட்ட போலீஸ்  தலைவர்  கலில்  அரிப்பினும்  ஆசிரியர்  ‘ஜோக்’  அடித்தார்  என்றே  கூறினார்.

“நாங்கள்  விசாரித்து  விட்டோம். தப்பான  புரிதல்தான்  இதற்குக்  காரணம்.  ஆசிரியரை  நான்  சந்தித்தேன்.  அவர்  சொன்னதை முஸ்லிம்- அல்லாத  மாணவர்கள்  தப்பாக  புரிந்து  கொண்டார்களாம்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.