நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை 10 சென் உயர்கிறது

ronup1உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் 10 லிருந்து வீட்சி கண்டு வரும் வேளையில் இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் ரோன்95 விலை ஒரு லிட்டருக்கு 10 சென் உயர்வு காண்கிறது.

ரோன்97 இன் விலை ஒரு லிட்டருக்கு 20 சென் உயர்கிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

இதன் விளைவாக ரோன்95 ஒரு லிட்டர் ரிம2.15 க்கும், ரோன்97 ஒரு லிட்டர் ரிம2.55 க்கும் விற்கப்படும்.

இப்புதிய விலைகளை பல பெட்ரோல் நிலையங்கள் உறுதிப்படுத்தின.