நஜிப்: ஃபிட்ச் தரமதிப்பீடு நம் நிதியியல் திறத்தைக் காண்பிக்கிறது

fitchமலேசியாவின்  எதிர்கால வாய்ப்பு   எதிர்மறை  நிலையிலிருந்து  திடநிலைக்கு  வந்திருப்பதாகக்  கூறும் ஃபிட்ச்  நிறுவனத்தின்  மதிப்பீடு  அரசாங்கத்தின்  நிதியியல் நிர்வாகத்  திறத்தைக் காண்பிக்கிறது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“புறத்தே  பல  நிச்சயமற்ற நிலவரங்கள்  நிலவினாலும் அண்மையில்  அறிவிக்கப்பட்ட  அம்மதிப்பீடு நம்  அரசாங்கத்தின்  நிதியியல்  நிர்வாகத்தையும்  பொருளாதாரக்  கொள்கைகளையும்  பிரதிபலிக்கின்றது”, என  முகநூலில்  நஜிப்  குறிப்பிட்டிருந்தார்..

2013-இல், மலேசியாவின்  எதிர்கால  வாய்ப்பு “எதிர்மறையானது”  என்று  கூறிய ஃபிட்ச்,  நேற்று  அறிவிக்கப்பட்ட  தரமதிப்பீட்டில் அக்கருத்தை  மாற்றிக்  கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பில்  இன்று  வெளியிட்டிருந்த  அறிக்கையில்,  மலேசியாவின் நிதியியல் நிலை  மேம்பட்டிருப்பதாகவும்  பொருள்,  சேவை  வரியும் (ஜிஎஸ்டி) எரிபொருள் உதவித் தொகை  சீரமைப்பும்  அதன்  நிதியியல்  கொள்கைகளுக்கு  ஆதரவாக  இருந்தன  என்றும் ஃபிட்ச்  கூறியது.