கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும்போது எரிபொருள் விலை ஏன் உயர வேண்டும்?

fuelபெட்ரோல்  விலை  குறைந்திருக்க  வேண்டும், உயர்ந்திருக்கக்கூடாது  என்று  எதிரணி  எம்பிகள்  கூறுகின்றனர். ஜூன்  மாத இறுதியில்  சுத்திகரிக்கப்படாத எண்ணெய்  விலை  குறைந்தது. பீப்பாய்க்கு  யுஎஸ்$66-இலிருந்து  நேற்று  அதன் விலை யுஎஸ்$62 ஆகக்  குறைந்திருந்தது.

அந்நிலையில் ரோன்95-இன்   விலை  லிட்டருக்கு  10  சென்  உயர்ந்து  ரிம2.15 ஆகி  இருக்கக்  கூடாது  என்றார் பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி. பார்க்கப்போனால்,   பிப்ரவரியில் கச்சா  எண்ணெய்  பீப்பாய்க்கு  யுஎஸ்$60 ஆக  விற்றபோது  இருந்த விலைக்கு அது  குறைந்திருக்க  வேண்டும்  என்றாரவர்.

“கச்சா  எண்ணெய்  விலை ஜூன் மாத இறுதியில் பீப்பாய்க்கு  கிட்டத்தட்ட  யுஎஸ்$60  என்ற  அளவுக்குக்  குறைந்தபோது  ரோன்95-இன்  விலை ரிம1.70  என்ற  அளவுக்குக்  குறைந்திருக்க  வேண்டும்.

“ஆனால், பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  அரசாங்கம், உலகக்  கச்சா  எண்ணெய்  நிலவரத்துக்கு  எதிராக ரோன்95-இன்  விலையை  நேற்று  உயர்த்தி  விட்டது.

புதிய பெட்ரோல்  விலை  இன்றிலிருந்து  நடப்புக்கு  வருகிறது. ரோன்97-இன்  விலையில்  20 சென்  உயர்ந்து லிட்டருக்கு  ரிம2.55 ஆனது.

அண்மைய பெட்ரோல்  விலையேற்றத்துக்கான  காரணத்தை  அரசாங்கம்  விளக்கவில்லை. பெட்ரோல்  விலை  மாற்றங்கள்  குறித்து  முன்கூட்டிய  அறிவிப்புகள்  வெளியிடுவதில்லை  என்ற  கொள்கையையும்  அது  கடைப்பிடிக்கத்  தொடங்கியுள்ளது.

அரசாங்கத்தின்  இப்புதிய  கொள்கையை  தெமர்லோ  எம்பி  நஸ்ருடின்  ஹசான்  சாடினார்.

“இது  மக்களைப்  பாதுக்காப்பதில்  அரசாங்கத்துக்கு  அக்கரை  இல்லை  என்பதைத்தான்  காண்பிக்கிறது. அதுவா  மக்களின்  சுமையைக்  குறைக்க  ஆக்கப்பூர்வமான  நடவடிக்கைகளை  எடுக்கப்  போகிறது”, என்று  குறிப்பிட்ட  நஸ்ருடின்  எரிபொருள் விலையேற்றம் பொருள்களின்  விலை  உயர்வுக்கு  இட்டுச் செல்லும்  என்றார்.