இடைத்தேர்தலில் பணபலம் முதல் கள்ளஓட்டு வரை: அதிமுக நடத்திய அத்துமீறல்கள் அம்பலம்!

admk_scam_001ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், அதிமுகவினர் நடத்திய அத்துமீறல்கள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடந்த அத்துமீறல்கள் அனைத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

அந்த இதழில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அன்று, எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டு பதிவாகவில்லை என்றதும் அதிமுக அத்தனை அத்துமீறல்களையும் ஒரு சேர அரங்கேற்றியது.

அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதுமிருந்து திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தொகுதி வாக்காளர்கள் அனைவரிடமும் பேசி அவர்களுக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை வழங்குவதாக உறுதி தந்து இரட்டை இலைக்கு அனைவரும் ஓட்டுப் போடும் மனநிலைக்கு கொண்டு வந்திருந்தோம்.

ஓட்டுக்கு இரண்டாயிரம் தருவோம், மூன்றாயிரம் தருவோம் என நம்பிக்கையை விதைத்திருந்தோம்.

ஆனால் மேலிட உத்தரவால், வாக்குக்கு வெறும் இருநூறு ரூபாய்தான் தர முடிந்தது.

இது வாக்காளர்களின் ஓட்டுப் போடும் ஆர்வத்தை குறைத்துவிட்டதால், மதியம் 2 மணி அளவில் வெறும் 50 சதவிகிதம் வாக்குகள்தான் பதிவானது.

நாங்கள் ஆட்டோ வைத்து அழைத்தும் ஓட்டுப் போட மக்கள் வரவில்லை.

உடனே நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னோம்.

அவர் போயஸ் கார்டனில் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார் என 2 மணிக்கு முன்பு இருந்த நிலவரங்களை விளக்கினார்.

ஜெயலலிதாவிடம் நிலைமையை விளக்கியபின், மதியம் இரண்டு மணிக்கு மேல் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக செயல்பட தொடங்கினார்.

மாநகர காவல் உளவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், வெளியூரிலிருந்து வந்த துணை ராணுவம், உள்ளூர் பொலிசாரின் கட்டளையை மீறி செயல்படக் கூடாது என்கிற உத்தரவு சென்னை நகர பொலிசிடமிருந்து வந்தது.

வாக்குச்சாவடி அதிகாரிகளாக இருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் பொறுப்பாளர்கள் சொல்வது போல் செயல்பட வேண்டும் என உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

230 பூத்களிலும் இருந்த சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் அனைவரும் அ.தி.மு.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

வாக்குச்சீட்டில் பெயரிருந்தும் வாக்களிக்க முடியாதபடி வீடுகள் மாறிப் போன 20% வாக்காளர்களின் பெயர் பட்டியலை அனைத்து பூத் ஏஜெண்டுகளையும் எடுக்க சொல்லிய ஓ.பன்னீர்செல்வம், அந்த வாக்குகளை போடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவை செயல்படுத்த வந்திறங்கிய அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க் கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் தங்கள் வேலையை தொடங்கியுள்ளனர்.

வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ. குணசீலன் லுங்கியும் சட்டையும் போட்டுக் கொண்டு கள்ள ஓட்டு மாறுவேடத்தில் திரிந்துள்ளார்.

நேதாஜி நகர் பகுதியில் மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா சென்னை நகர பதிவெண் கொண்ட காரில் வந்திறங்கியுள்ளார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வாக்குச் சாவடிக்குள் நுழைய தொடங்கியதால், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை 60 சதவிகிதத்தை மட்டுமே தொட்ட வாக்கு சதவிகிதம், அடுத்த 2 மணிநேரத்தில் 74 சதவிகிதமாக மாறியது.

சேனியம்மன் கோயில் தெருவில் அந்த வாக்குசாவடிக்கு தொடர்பேயில்லாத அ.தி.மு.க. கவுன்சிலர் அஞ்சுலட்சுமி தலைமையில் வந்த அதிமுகவினர், எதிர் வேட்பாளர் டிராஃபிக் ராமசாமியுடன் மோதியுள்ளனர்.

நிச்சயம் இந்த தேர்தல் செல்லாது என வழக்கு போடுவேன் என டிராஃபிக் ராமசாமி எச்சரித்தார்.

அவரிடம் ஒரு இளைஞர் கைகுழந்தையுடன் போய், நான் வாக்களிக்க இங்கிலாந்திலிருந்து வந்தேன். என் வாக்கை போட்டுட்டாங்க என புகார் கூறியுள்ளார்.

மகாராணி தியேட்டர் அருகே உள்ள பூத் எண் 181 ஆன, அரசு மகளிர் பள்ளியில், கள்ள ஓட்டு போட போன அ.தி.மு.க. மகளிரணியிடம், தேர்தல் அதிகாரி பெயர் என்னவென்று கேட்டுள்ளார்.

அந்த பெண் மங்கை என பெயர் கூற, கையில் இருந்த ஸ்லிப்பில் ஸ்வாதி என பெயர் இருந்ததால் பொலிசாரை அழைத்து மகளிரணியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற அமைச்சர் வளர்மதியின் ஆட்கள், வாக்களிக்க வந்த பெண்ணை மானபங்க படுத்தினீங்களா? என கேட்டு அந்த பூத்தினை அவர்கள் வசமாக்கி கொண்டனர்.

அந்த பூத்தில் இருந்த சி.பி.எம். தோழர்கள் இதுபற்றி புகார் கொடுத்ததால், அளவுக்கதிகமான வாக்குகள் பதிவானது என அந்த பூத்திற்கு மட்டும் மறு வாக்குப்பதிவை அறிவித்து தேர்தல் ஒழுங்காக நடந்தது என்பது போல தேர்தல் ஆணையம் காட்டி கொண்டது.

தென்சென்னையின் சைதாப் பேட்டை அ.தி.மு.க. கவுன்சிலர் வத்சலா, திருவொற்றியூர் அ.தி.மு.க. கவுன்சிலர் பேரரசி, சேப்பாக்கம் பகுதி அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கலா, மவுன்ட்ரோடு அ.தி.மு.க. கவுன்சிலர் அலிகான் பஷீர் என தொகுதி முழுவதும் அ.தி.மு.க.வின் முகம் தெரிந்த பிரபலங்களும் விறுவிறுவென கள்ள ஓட்டு போட்டுகொண்டிருந்தனர்.

இப்படி ஓ.பன்னீர்செல்வம் மூலம் வெறும் 60 சதவிகிதம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட வாக்கு சதவிகிதம் 75 சதவிகிதமாக உயர்ந்தது.

வாக்குபதிவு நடந்த அன்று தேர்தல் பார்வையாளர்கள் என்ற பெயர் பலகை பொதிந்த ஒரு கார் கூட தொகுதிக்குள் சுற்றி வரவில்லை என்று வார இதழில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை அத்துமீறல்களையும் துணிந்து செயல்படுத்தி தான், இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதல்வர் பதவியை ஜெயலலிதா தக்க வைத்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: