சிங்கள அரசின் திட்டமிட்ட சதிச்செயலுக்குத் துணைபோவோரை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

lttelogoபுலம்பெயர் தேசத்தில் நிம்மதியற்ற வாழ்வு என்ற உணர்வினை ஏற்படுத்தி தாம் விரும்பும் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்வதற்காக சிங்களப் புலனாய்வாளர்கள் முயன்று வருவதன் வெளிப்பாடே! போரின் போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் முன்னை நாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தி புலம்பெயர் தேசத்தில் திட்டமிட்ட வகையில் வன்முறை குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

கண்டன அறிக்கை:                                                                                                        

27.06.2015

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நசுக்கி தமிழினத்தை அழித்துவரும் சிங்கள இனவாத அரசு, தெளிவான முறையில் திட்டமிட்டு மிகவும் நுணுக்கமாக, தமிழ் மக்களின் விடுதலைச் சிந்தனையை அடக்க பிரயத்தனப்படுகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த முயற்சிக்கு சில வல்லரசுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைநிற்கின்றன. தமிழ் மக்களுக்கான நீதியினை மறுத்தும் தாமதித்தும் வருகின்ற இவ்வல்லரசுகள் ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் தொடரும் இனப் படுகொலையை நிறுத்த முன்வரவில்லை என்பதே வேதனைக்குரிய விடையமாகும்.

ஈழத்தமிழர்களின் பேச்சுச் சுதந்திரத்தினை பறித்தது மட்டுமன்றி உண்மையையும் மறைத்து பயங்கரவாதத்திலிருந்து மக்களுக்கு விடுதலை வழங்கியுள்ளோம் என்று ஒரு மாயையை உருவாக்கியுள்ளது பௌத்த சிங்கள அரசு. மீள்கட்டுமானம் என்ற பெயரில் புதிய கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசத்தளங்கள், தங்குமிட வசதிகள் என பல ஏற்பாடுகளைச் செய்து இலங்கைத் தீவானது ஒரு சிங்கள நாடு என சர்வதேசத்திற்கு வலியுறுத்தி வருகின்றது.

சிறிலங்கா அரசானது ஈழத்தமிழர்கள் தமது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை போன்றவற்றை வெளிப்படையாகக் கதைப்பதையோ நடாத்தப்பட்ட அநீதிகளுக்கான நீதி கேட்கப்படுவதையோ முற்றுமுழுதாக நிராகரிக்கின்றது. இதற்கு ஏற்ற வகையில் வல்லரசு நாடுகள் சில இனவழிப்பு என்ற வார்தைப் பிரயோகத்தைத் தவிர்க்குமாறும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு காணுமாறும் வலியுறுத்தி வருகின்றது. அது மட்டுமன்றி அதற்கு ஏற்ற அரசியல் நகர்வுகளையும் நகர்த்தி வருகின்றது. இலங்கையின் ஆட்சி மாற்றமும் அதன் தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பயனும் தரப்போவதில்லை. மாறாக எமது இனத்தின் விழுமியங்கள் அழிக்கப்பட்டும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நிலஅபகரிப்பினை செய்வதோடு வலுவற்ற சிறுபான்மை இனமாக எம்மை உருமாற்றம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிரியால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

தாயகத்தில் நிலமை இவ்வாறு நகர்த்தப்பட்டுவரும் அதேவேளை, புலம்பெயர் தேசங்களில் தாயக விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றவர்களை இலக்கு வைத்து கொலை முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிறீலங்கா அரசானது தனது கைக்கூலிகளின் உதவியுடன் வன்முறையினை கையாண்டு தமிழ்மக்கள் மத்தியில் விருசல்களை உருவாக்கி இன ஒற்றுமையை குலைக்கும் செயற்பாட்டில் தீவிரம் காட்டிவருகின்றது. இது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் தாயக விடுதலை வேட்கையை நிர்மூலமாக்கும் ஓர் உத்தியாகும்.
விடுமுறையில் தாயகம் செல்லுகின்ற தமிழ் உறவுகளை அன்பாக அரவணைத்து, ஆதரவு காட்டுவது போல் பாசாங்கு காட்டி.

புலம்பெயர் தேசத்தில் நிம்மதியற்ற வாழ்வு என்ற உணர்வினை ஏற்படுத்தி தாம் விரும்பும் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்வதற்காக சிங்களப் புலனாய்வாளர்கள் முயன்று வருவதன் வெளிப்பாடே! போரின் போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் முன்னை நாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தி புலம்பெயர் தேசத்தில் திட்டமிட்ட வகையில் வன்முறை குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதற்கு அமைவாகவே, கடந்த வாரம் பிரான்சின் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீதான கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. புலம்பெயர் தேசத்தில் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளின் சட்டவிதிகளுக்கமைய நடாத்தி வருகின்ற போராட்டங்களை வீணடித்து, தமிழ்மக்கள் மேல் அவப்பெயரை ஏற்படுத்த நினைக்கின்ற சிங்கள அரசின் திட்டமிட்ட சதிச்செயலுக்குத் துணைபோவோரை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பாக எமது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிக்கொள்கின்றோம்.

-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-

அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்

-http://www.sankathi24.comKandana Arikkai-page-001

Kandana Arikkai-page-002

TAGS: