WSJ செய்தி ஒரு அரசியல் சூழ்ச்சி- பிரதமர் அலுவலகம்

pmoவால் ஸ்திரிட்  ஜர்னல் (WSJ)செய்தியை  நஜிப்  அப்துல் ரசாக்குக்கு  எதிரான   “அரசியல்  சூழ்ச்சி”-இன்  தொடர்ச்சி  எனப்  பிரதமர்  அலுவலம்(பிஎம்ஓ)  வருணித்தது.

உலகளாவிய  சவால்களுக்கு  எதிராக  மலேசியப்  பொருளாதாரத்தை  வெற்றிகரமாக  அவர்  வழிநடத்திச்  சென்று  கொண்டிருந்தாலும்  தனிப்பட்ட  சிலர்,  நம் பொருளாதாரத்தின்மீதுள்ள  நம்பிக்கைக்குக்  குழிபறிக்கவும்  அரசாங்கத்தின்  பெயரைக்  கெடுப்பதற்கும்  ஜனநாயக  முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு  பிரதமரைப்  பதவியிலிருந்து  அகற்றவும்  முனைப்புடன்  இருந்து  வருகிறார்கள்.

“பெயர்  குறிப்பிடாத  விசாரணையாளர்களை  மேற்கோள்காட்டி  பிரதமர்மீது  சுமத்தப்பட்டிருக்கும்  இந்த அண்மைய  குற்றச்சாட்டுகள்  எல்லாம் அந்த  அரசியல்  சூழ்ச்சியின்  தொடர்ச்சிதான்”, என்று பிஎம்ஓ  அறிக்கை  கூறியது..

ஊடகங்களுக்குத்  தவறான  தகவல்  தெரிவிப்பதற்காக  ஆவணங்கள்  திருத்தப்பட்டு  வெளியிடப்பட்டதாக  செய்திகள்  வெளிவந்திருப்பதை  அது  சுட்டிக்காட்டியது.

“எனவே,  ஊடகங்களில்  உள்ள  பொறுப்பானவர்கள், ஆவணங்கள் அதிகாரிகளால்  உறுதிப்படுத்தப்படாதவரை  அவற்றை உண்மையானவையாக  ஏற்றுக்கொள்ளக்  கூடாது”, என்று  அது  கேட்டுக்கொண்டது.

குற்றச்சாட்டுகளைப்  பொருத்தவரை, பிரதமருக்குப் பணம்  கொடுத்ததில்லை  என்பதை  1எம்டிபி  ஏற்கனவே  குறிப்பிட்டிருப்பதையும்  அது  சுட்டிக்காட்டியது.