அம்பிகா டிஏபி-இல் சேர்வதை விரும்புகிறார் பாக் சமட்

pakடிஏபி  கட்சியில்  சேர்ந்துள்ள  தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சைட், பெர்சே 2.0-இல்  தம்முடன்  இணைத்  தலைவராக  இருந்த  அம்பிகா  ஸ்ரீநிவாசனும்   மாணவர்  தலைவர்  ஆடம்  அட்லி  அப்துல்  ஹாலிமும் அரசியலில்  சிறப்பாக  செயல்பட  முடியும்  என்று  நினைக்கிறார்.

“அவர்(அம்பிகா)  வருவதை  வரவேற்கிறேன். அவர்  திறமையானவர், அறிவாளி. அவர்  டிஏபி-இல் சேர்வதை  விரும்புகிறேன்.

“ஆடமும்  டிஏபி-இல்  சேர  வேண்டும். அவரைப்போல்  மற்ற  மாணவர்  தலைவர்களும்  வர  வேண்டும். அவர்கள்  இளம்  தலைமுறையினருக்கு  நிறைய பங்காற்ற  முடியும் என  நினைக்கிறேன்”, என  சமட்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.