நாளைய மனிதா – வேலு

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

நாளைய  மனிதா    - வேலு

ஊழல் , கொத்தடிமை
வறுமை , பொருளாராத மந்தம்
இந்த விடியலுக்கான தேடலில்
இன்னும் விழிக்காமல் உலகம் !!!!!

நாளைக்கு என்று சேர்த்து வைக்கிறோம்
கண்ணாடி பெட்டிக்குள்
சில செடிகளும் சிறிய தண்ணிர் குலமும்

தொழில் மாயம் தலை விரித்தாடா
பசுமையை பள்ளத்தாக்கில் பதுக்கி வைத்துள்ளோம்

நாளைய மனிதா
வா வா
உனக்கென்று கொடுக்கபடுகிறது
சில வரங்கள் இன்றைய மனிதனால்

“மாசு கொண்டு மரணத்தை நோக்குவாய் விரைவில்” என்று ..

– வேலு

TAGS: