நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தமிழ் நடிகர் ஒருவர் தயாரில்லையா ?

vishalAநடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தமிழ் நடிகர் ஒருவர் தயாரில்லையா ? தெலுங்கர்கள் எப்படி போட்டியிடலாம் என கேட்கும் நாம், தமிழ் இன உணர்வுடன் கூடிய ஒரு நடிகர் ஏன் அந்த பதவிக்கு போட்டியிட முன் வரவில்லை என்ற கேள்வியை கேட்கிறோமா ?

தமிழின துரோகி நாடார் சரத்குமார் தலைவர் பதவிக்கு இருக்கிறார், பொதுச் செயலாளர் பதவிக்குத்தான் போட்டி நடக்கிறது என்றால், அந்த பதவிக்கு விசால் என்ற தெலுங்கரும் , ராதரவி என்ற தெலுங்கரும் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பற்றி பெரிதும் கவலைப்படும் நாம், இந்த இருவரையும் கடந்து ஒரு தமிழர் ஏன் களத்தில் இல்லை என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும் ,,,

Radharaviடேய் இது தமிழ் நாடு இங்க தலைவராக, பொதுச் செயலாளராக முக்கிய பதவிகளுக்கு வருபவர்கள் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்ற தமிழ் இனப்பற்று கொண்ட , தமிழ் இன உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற உணர்வு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ஏன் போட்டியிட கூடாது?

ஒருவேளை இவர்கள் போட்டியிட முன் வராவிட்டால், நடிகர் சிவக்குமார் அல்லது சூர்யா போன்றவர்களில் ஒருவரை போட்டியிட வைக்கும் முயற்சியை முன்னெடுக்கலாம்.

எந்த ஒரு தமிழனும் போட்டியிட முன் வராத நிலையில், தெலுங்கர்களே போட்டியிடுகிறார்களே என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. திண்ணை காலியாக இருந்தால் யாராவது வந்து உட்காரவே செய்வார்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட ஒரு தமிழின நடிகரை தயார்படுத்தி அனுப்பும் முயற்சியை விரைந்து முன்னெடுப்போம் நன்றி

செங்கீற்று