பினாங்கு அம்னோ: புவா பிஎசியிலிருந்து விலக வேண்டும்

 

Puaumnoடிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினராக டோனி புவாவுக்கு பெருந்தன்மையும் வெளிப்படையான தன்மையும் இருக்குமானால் அவர் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிலிருந்து (பிஎசி) விலகிக்கொள்ள வேண்டும் என்று பினாங்கு அம்னோ தொடர்புக் குழு தலைவர் மூசா  ஷெய்க் பாட்ஸீர் கூறினார்.

நேற்றிரவு புக்கிட் மெர்தாஜாமில் நடந்த ஹரி ராயா விருந்து உபசரிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூசா அவர் ஏன் விலக வேண்டும் என்றால் பிஎசி 1எம்டிபி ஆணவங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் கிளேர் பிரௌனை சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் பல தடவைகளில் சந்தித்ததாக புவா கடந்த புதன்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார். ஆகவே, அவர் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகிறது என்றார் மூசா.

“நாம் வெளிப்படைத் தன்மை பற்றி பேசுகிறோம். என்னைப் பொறுத்த வரையில் சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரை சந்தித்தப் பின்னர் புவா பிஎசியில் இருக்கக்கூடாது.

“அவர் பிஎசியில் இருந்தால் அவர் எப்படி அந்த விவகாரத்தை விசாரிக்கப் போகிறார்; அவரே வெளிப்படையாக இல்லாத போது அவர் எப்படி வெளிப்படைத் தன்மை குறித்து பேசப் போகிறார்”, என்று மூசா வாதிட்டார்.