இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் காலமானார்

 

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியும் முன்னாள் அதிபருமான எபிஜே அப்துல் கலாம் நேற்றிரவு மணி 11.25 அளவில் மாரடைப்பால் apj1காலமானார்.

அப்துல் கலாம் மேகலாயா, சில்லோங்கில் இந்திய நிருவாக கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மயக்கமுற்றார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர் அவர் மரணமுற்றார்.

அப்துல் கலாம் தமிழ் நாடு, இராமேஸ்வரத்தில் 1931 ஆம் ஆண்டில் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்தார். தமது விடாமுயற்சியாலும் கடும் உழைப்பாலும் ராக்கெட் விஞ்ஞானியாக உயர்ந்த அவர் இந்தியாவின் “Missile Man என்றழைக்கப்பட்டார்.  ” மக்களின் அதிபர்” என்றும் அவர் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தியா 2020 இல் உலகின் வல்லரசு நாடாடுகளில் ஒன்றாக விளங்கும் என்பது அவரது கனவாகும்.

அப்துல் கலாம் இந்தியாவின் 11 ஆவது அதிபராக 2002 லிருந்து 2007 வரையில் பதவி வகித்தார். தம்மை “டாக்டர்” என்று அழைக்கக் கூடாது என்பது அப்பெருமகனின் வேண்டுகோளாகும்.

உடைகள் மற்றும் நூல்கள் அடங்கிய இரு பெட்டிகளுடன் இந்தியாவின் அதிபர் மாளிகையில் குடியேறிய அப்துல் கலாம் 2007 ஆம் ஆண்டில் அவரது பதவிக் காலம் முடிந்து அம்மாளிகையை விட்டு அதே இரு பெட்டிகளுடன் வெளியேறிய ஊழற்ற தலைவராவார்.

குழந்தைகள், மாதர்கள் மற்றும் ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக அப்துல் கலாம் தம்மை அர்பணித்துக் கொண்டார்.