தெற்கு தீர்வை தர தயாராவில்லை! சுரேஸ் குற்றச்சாட்டு!!

suresh_prem_001தென்னிலங்கையைப்பொறுத்த வரையில் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறுகின்ற தெற்கு அரசியல் வாதிகள் எவருக்குமே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் மனப்பான்மை இல்லை. அந்த வகையில் தான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கிற்கும் சந்வதேசத்திற்கும் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருந்தது. அதன் பிரகாரம் தான் இனப்பிரச்சனைக்குத் தீர்வாக தேர்தல் வி;ஞ்ஞாபனத்தில் சமஷ்டியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன்

யாழ்.ஊடக அமையத்தினில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் து நிலைப்பாட்;டை நாம் முன் வைத்திருக்கின்ற போது அது தமிழிழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்றும் அந்த வகையில் சமஷ்டியை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒற்iயாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும் கூறுகின்றனர். அதே நேரம் சமஷ்டிக்கு சிங்கள முற்போக்கு,; ஐ.தேக மற்றும் ஐ.ம.சு.கூ கட்சிகள் தென்னிலங்கையில்; எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக கூடட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு தென்னிலங்கையில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதுடன் அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்த விடயம் விடயம் தொர்பில் இன்று பல வெளிநாட்டுத் தூதரகங்களும எம்மிடம் வினவியிருக்கின்றனர்.
ஆனால் நாம் எமது கோரிக்கைகள் தேவைகள் என்ன என்பதனை முன்வைத்து; தமிழ் மக்களுக்கு உரித்தான சுயநிர்ணய அடிப்படையில் தீர்வையே கேட்டிருக்கின்றோம். தமிழ் மக்கள் நீண்டகாலமாக தலைமுறை தலைமுறையாக பல வழிகளிலும் போராடியே வந்திருக்கின்றனர். ஆனால் இது வரையில் தீர்வு வழங்கப்படாது ஏமாற்றப்பட்டே வந்தனர்.

இவ்வாறு இனப்பிரச்சனைக்கான தீர்வை காலங் காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மறுதலித்தே வந்திருக்கின்றது. இதனாலேயே ஆயுதப் போராட்டமும் தோற்றம் பெற்றது. அந்தப் போராட்டத்தை இலங்கை உட்பட சர்வதேச நாடுகள் இணைந்து முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்ற போதும் இனப்பிரச்சனைக்கு தீர:வு ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் இதற்கான தீர்வாகவே சமஷ்டிக் கோட்பாடை நாம் தேர்தலில் முன்வைத்திருக்கின்றோம். ஆனால் அதனை எதிர்க்கின்ற நிலையிலையே தென்னிலங்கை அரசியல் வாதிகள் இருக்கின்றனர். இங்கு அவர்கள் எதிர்க்கின்றனர் என்பதற்காக நாம் எமது கோரிக்கையை விட்டுவிட முடியாது. ஒற்றையாட்க்குள்ளும் தீர்வை ஏற்கப் போவதில்லை.

இங்கு தனி நாட்டுக்காக போராடிய இனம் இன்று சமஷ்டியை ஒன்றுபட்ட இலங்கைக்குள் கேட்கின்ற போது அதனையும் ஆட்சியாளர்கள் எதிர்த்து ஒற்றையாட்சிக்குள்ளே தான் தீர்வு சுhயட்சிக்குள் இல்லை எனக் கூறுவார்களாயின் எமது பிரச்சனைக்கு தீர்வை எக்காலத்திலும் வழங்கமாட்டார்கள் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.

இந்த ஒற்றையாட்சி முறைக்கு கீழேயே 13 ஆவது திருத்த சட்டமும் காணப்படுகின்றது எனவே இந்த ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் காணப்படுகின்றது ,தனை நாட்டின் ஜனாதிபதி விரும்பினால் நடமுறைபடுத்தலாம் அல்லது அதனை வெளியில் எடுக்கலாம். ஆகவே சுயாடசியினை தரவதற்கு முன்னய அரசும் முன்வரவில்லை.

ஆகவே பாதிக்கபட்டவர்கள் நாம் தான். பாதிக்கப்பட்டவர்கள் நாம் கோருகின்ற போது அதனை விடுத்து பாதிப்பை ஏற்படுத்pயவர்கள் கூறுவது தீர்வாகாது. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையிலான தீர்விற்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் உதவி வழங்க வேண்டும்.
நாம் கேட்கின்ற சுயாட்சி அடைப்படையிலான சம்ஷ்டித் தீர்வு தவறான விடயமல்ல. இவ்வாறு உலகில் பல நாடுகளில் இருக்கின்றது. இலங்கை அரசு எதிர்த்தாலும் நாம் எமது நீதியான நியாயத்தை முன்வைத்திருக்கின்றோம். எமது பிரச்சனையைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவிற்கு பொறுப்பும் கடமையும்; இருக்கின்றது.

மேலும் இதனைத்தீர்த்து வைப்;பது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும்; நல்லது. ஆகவே இதற்கு முன்னனுரிமை கொடுத்து எமது பிரச்சனையைதை; தீர்த்து வைப்பதற்கு இந்தியா முன்வந்து பிரச்சனைக்கு தீ;ர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

-http://www.pathivu.com

TAGS: