‘துணைப் பிரதமர் சொன்னது தவறு, 1எம்டிபி காரணமாக அம்னோ தேர்தலில் தோற்காது’

sabri1எம்டிபி விவகாரம்  காரணமாக  அம்னோ  அடுத்த  பொதுத்  தேர்தலில்  தோற்றுப்  போகும்  எனத்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  கூறியிருப்பதை  விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  நிராகரித்துள்ளார்.

அம்னோ  ஒற்றுமையாக  இருந்து  அதன்  உறுப்பினர்கள்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  வெற்றி  பெறும்  நோக்கத்துடன்  கடுமையாக  பாடுபட்டால் அது  தோற்காது  என்றாரவர்.

“எந்த ஆய்வின்  முடிவை  வைத்து  துணைப்  பிரதமர்  அப்படிச்  சொன்னார்  என்று  தெரியவில்லை.

“இதற்குமுன்பு  (முன்னாள்  பிரதமர்) டாக்டர்  மகாதிர்  முகமட்தான்  அப்படிச்  சொல்லி  வந்தார்”, என  செர்டாங்கில்  செய்தியாளர்களிடம் சப்ரி  கூறினார்.

தம்  தொகுதி மக்கள்  1எம்டிபி  பற்றி  அதிகம்  பேசுவதில்லை  என்றவர்  தெரிவித்தார்.

“கிராமப்புற  மக்கள்  பொருள்  சேவை  வரி(ஜிஎஸ்டி)  பற்றியும்  விலைவாசி  ஏற்றம்  பற்றியும்தான்  பேசுகிறார்கள்.

“கோலாலும்பூரில்  உள்ளவர்களும்  சமூக ஊடகங்களும்தான்  1எம்டிபி  பற்றி  விவாதிக்கிறார்கள்”, என்றாரவர்.