‘முகைதினை நீக்குவது சிரமமாகத்தான் இருந்தது ஆனாலும் செய்ய வேண்டியதாயிற்று’

muhபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  முகைதின்  யாசினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  நீக்குவது  ஒரு  சிரமமான  முடிவுதான்  என்றாலும்  அமைச்சரவை  கருத்துவேறுபாடின்றி  ஒன்றாக  செயல்படுவதற்கு  அப்படிச்  செய்வது  அவசியமாயிற்று  என்றார்.

“முகைதினை  வெளியேற்றுவது  என்பது  சிரமமான  முடிவுதான். ஆனாலும்,  அமைச்சரவை  ஒன்றாகச்  செயல்படுவதற்கு  நான்  வலுக்கட்டாயமாக  அவ்வாறு  செய்ய  வேண்டியதாயிற்று.

“முகைதினுக்கும்  இப்போது  அரசாங்கத்தில்  இல்லாத  மற்ற  அமைச்சர்கள்,  துணை அமைச்சர்களுக்கும்  அவர்களின்  பங்களிப்புக்காக  நன்றி  தெரிவித்துக்  கொள்கிறேன்”, என  நஜிப்  புத்ரா  ஜெயாவில்  அமைச்சரவை  மாற்றத்தை  அறிவித்த  பின்னர்  கூறினார்.

அமைச்சர்கள்  பொதுமக்களிடையே  கருத்துமாற்றத்தை  ஏற்படுத்தும்  வகையில்  பொதுவில்  பேசுவது  சரியல்ல  என  நஜிப்  குறிப்பிட்டார்.

“அது  கூட்டுப்  பொறுப்பு  என்ற  கோட்பாட்டுக்கு  எதிரானது”, என்றாரவர்.