பிரதமரின் முகநூல் பக்கத்தில் பதவி விலகச் சொல்லும் செய்திகள் குவிகின்றன

fbookபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினைப்  பதவியிலிருந்து  வெளியேற்றியதை  அடுத்து  அவரது  முகநூல்  பக்கத்தில்  நேற்று  தொடங்கி  “#najibletakjawatan” செய்திகள்  நிறைந்து  வருகின்றன.

இன்று காலைவரை 34,952  கருத்துகள்  அப்பக்கத்தில்  பதிவிடப்பட்டிருந்தன. பெரும்பாலானவை நஜிப்பைப்  பதவி  விலகச்  சொல்லியிருந்தன.

அதை  எதிர்க்கும்  வகையில்  நஜிப்  ஆதரவாளர்கள் “#WeSupportYouNajibRazak” என  நஜிப்புக்கு  ஆதரவு  தெரிவித்திருந்தார்கள். ஆனாலும்,  அவர்களால்  எதிர்ப்பாளர்களுக்கு  ஈடு  கொடுக்க  முடியவில்லை.

இதனிடையே, முகநூலில்  முகைதினின்  பிரியாவிடை  செய்தி  183,197 விருப்ப  இசைவுகளை(லைக்குகள்)ப் பெற்றுள்ளது. 12,655 கருத்துகளும்  பதியப்பட்டிருந்தன. பெரும்பாலோர்  முகைதினுக்கு  ஆறுதலும்  ஆதரவும்  தெரிவித்தனர்.