மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க பிரதமருக்கு உதவுவேன் -நூர் ஜஸ்லான் சூளுரை

nur jazஉள்துறை  துணை  அமைச்சராக  புதிதாக  நியமிக்கப்பட்டிருக்கும் நூர்  ஜ்ஸ்லான்  முகம்மட்,  அரசாங்கத்தின்மீது  மக்களின்  நம்பிக்கையைப்  பெருக்க பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  உதவியாக இருக்கப்போவதாக  உறுதி  கூறியுள்ளார்.

“பொதுஒழுங்கை  நிலைநிறுத்தி  அரசாங்கத்தின்மீது  மக்களுக்குள்ள  நம்பிக்கை  உயர்வதற்கு  உதவுவேன்  என  வாக்குறுதி  அளிக்கிறேன்.

“அத்துடன் (புதிதாக  துணைப்  பிரதமராகியுள்ள) உள்துறை  அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடிக்கும்  உதவியாக  இருப்பேன்”, என்று  நூர்  ஜஸ்லான்  கூறியதாக்  பெர்னாமா  அறிவித்துள்ளது.

நூர்  ஜஸ்லான்  1எம்டிபி மீது  விசாரணை  நடத்திவந்த  பொதுக்  கணக்குக்குழுவின்(பிஏசி)  முன்னாள்  தலைவராவார்.

நேற்றைய  அமைச்சரவை  மாற்றத்தில்  பிஏசி-இல்  இருந்த 8 எம்பிகளில்  நால்வருக்கு  அமைச்சர்/ துணை  அமைச்சர்  பதவிகள்  கொடுக்கப்பட்டுள்ளன.

இது  பிஏசி-இன்  விசாரணையைக்  கெடுக்கும்  முயற்சி  எனக்  குறைகூறப்பட்டுள்ளது.