முகைதின்: மகாதிர் மகனுடன் சேர்ந்து சதி செய்யவில்லை

muk muhடாக்டர்  மகாதிரின்  புதல்வர்  முக்ரிஸுடன்  சேர்ந்து  சதி  செய்வதாகக்  கூறப்படுவதை  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  மறுத்தார்.  முக்ரிஸ்  நேற்று முகைதினைச் சந்திக்க  அவரது  வீட்டுக்குச்  சென்றதை  வைத்து  அவ்வாறு  கூறப்படுகிறது.

புக்கிட்  டமன்சாராவில்  உள்ள  தம் இல்லத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  முகைதின்  அது வழக்கமான  ஒரு    வருகைதான்  என்றார்.

“சதித்  திட்டமெல்லாம்  கிடையாது, அது  ஒரு  சாதாரண வருகைதான். என்  நண்பருக்கு  அப்படி  நேர்ந்திருந்தால்  நானும்  அதைத்தான்  செய்திருப்பேன்”, என்றார்.