முகைதின்: நாடாளுமன்ற கொறடா சொல்வதைக் கேட்பேன்

parl whipநாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்க்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்படுமானால் முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  அம்னோவின்  நாடாளுமன்ற  கொறடா  சொல்படிதான்  நடந்து கொள்வார்.

“நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டுவரப்படுமா  என்பது  எனக்குத்  தெரியாது.

“(அப்படி கொண்டுவரப்பட்டால்) கட்சியின்  பொறுப்பான  உறுப்பினர்  என்ற  முறையில்  கட்சி  கொறடா  சொல்வதுபோல்  முடிவு  செய்வேன்”, என  முகைதின்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.