முகைதின்: ஒரு தலையசைவில் பதவி பறிபோயிற்று

sackஒரு  சிறிய தலை அசைவுதான். அதன்  மூலமாக  பிரதமர்  நஜிப்  ரசாக்  துணைப்  பிரதமராக இருந்த  முகைதின்  யாசினைப்  பதவியிலிருந்து  வெளியேற்றினார்.

தாம்  பதவிநீக்கம்  செய்யப்பட்ட  விதத்தை  முகைதின்  செய்தியாளர்களிடம்  விவரித்தார்.

“நேற்று  பிற்பகல்  12.15க்குப்  பிரதமரைச்  சந்திக்குமாறு  என்னிடம்  கூறப்பட்டது.

“சிறிது  பேசிய  பின்னர்  அழைத்தது ஏன்  என்று  கேட்டேன்.

“அமைச்சரவை  மாற்றம்  பற்றிப்  பேசவா  என்று  வினவியதற்கு  அவரால்  பேச  முடியவில்லை.

“நான்  அமைச்சரவையில்  இல்லையா  என்று  கேட்டதற்கு  அவர்  மேலும்  கீழுமாக  தலை அசைத்தார். நான் ‘நன்றி’ என்றேன்”, என  முகைதின்  கூறினார்.

பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்டது  பற்றி  எப்போது  தெரியும்  என்று  செய்தியாளர்கள்  வினவியதற்கு  முகைதின்  இவ்வாறு  விவரித்தார்.