சட்ட நிபுணர் அசீஸ் பாரி டிஏபி-இல் சேர்ந்தார்

azizஅரசமைப்புச்  சட்ட  வல்லுனரும்  முன்னாள்  சட்ட  விரிவுரையாளருமான  அப்துல்  அசீஸ்  பாரி  டிஏபி-இல்  சேர்ந்துள்ளார்.

டிஏபி  திறமைக்கு  மதிப்புக்  கொடுப்பதும்  அனைவரையும்  அரவணைத்துச்  செல்லும்  அதன்  பண்பும்  தம்மை  வெகுவாகக்  கவர்ந்து  விட்டது  என்றாரவர்.

கடந்த  பொதுத்  தேர்தலில்,  அசீஸ்  சாபாக்  பெர்ணம்  நாடாளுமன்றத்  தொகுதியில்  பிகேஆர்  வேட்பாளராக  போட்டியிட்டார். ஆனால்,  பிஎன் வேட்பாளரான  முகம்மட்  பாசியா  முகம்மட்  ஃபாக்கேயிடம்  தோற்றார்.

அசீஸ்  இன்று  கோலாலும்பூரில்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம் கிட்  சியாங்,  கட்சி பிரச்சாரப்  பகுதித்  தலைவர்  டோனி  புவா  முதலியோருடன் செய்தியாளர்களைச்  சந்தித்தார்.

“பதவியை நாடவில்லை. (கட்சிக்குப்)  பங்காற்றவே  விரும்புகிறேன்”, என்றாரவர்.

பிகேஆரிலேயே  இருக்காமல்  டிஏபி  வந்தது  ஏன்  என்ற  கேள்விக்கு  தம்  திறமையை  முழுமையாக  பயன்படுத்திக்கொள்ள  டிஏபி-தான்  ஏற்ற  இடம்  என்றார்.