அது‘தீய அறிக்கை’- துணைப் பிரதமர் சாடல்

chargeசரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளம்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  தயாரிக்கப்பட்ட  குற்றப்பத்திரிகை  என்று கூறி  ஓர்  அறிக்கையை  வெளியிட்டு  அதன்  மூலம்  பிரதமரைக்  குற்றவாளியாகக்  காண்பிக்க  முயல்வதாக அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  சாடியுள்ளார்.

“அது பிரதமருக்கு  எதிராக  எதிர்மறையான  எண்ணத்தை  உருவாக்க  முயலும்  ஒரு  தீய  அறிக்கை”, என்று  துணைப்  பிரதமர்  சாடினார்.

அந்த  இணையத்தளத்துக்கு  எதிராக போலீசும்  மலேசிய  தொடர்பு, பல்லூடக  ஆணையமும் (எம்சிஎம்சி)  நடவடிக்கை  எடுக்கும்  என  ஜாஹிட்  தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகை  வரைவு  ஒன்றும் அதன்  காரணமாகவே  அப்துல்  கனி  பட்டேல்  சட்டத்துறைத்  தலைவர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டார்  என்ற  செய்தியும்  இணயத்தில்  வலம்  வந்துகொண்டிருப்பதாக  நேற்று  மலேசியாகினியும்  அறிவித்திருந்தது.

புதிதாக  நியமனம்  செய்யப்பட்டுள்ள சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட் அஃபாண்டி  அலி,  அது  ஒரு  பொய்யான  பத்திரம்  என்று  கூறி  நிராகரித்தார். அது,  பிரதமரைக்  கவிழ்க்க  சதி  நடக்கிறது  என்பதைக்  குறிப்பாக  தெரிவிக்கிறது  என்றும் அவர்  சொன்னார்.

இதனிடையே,  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார், குற்றப்பத்திரிகை  தயாரிக்கப்பட்டதா  என  கனியை  விசாரிக்க  வேண்டிய  அவசியமில்லை  என்றார்.

“ஏஜி  அலுவலகம்  அப்படி  ஓர்  ஆவணமே  இல்லை  என்று  மறுத்துள்ளது. அப்படி  இருக்கும்போது  எதற்காக  முன்னாள்  ஏஜியை  விசாரிக்க  வேண்டும்.  தேவையில்லை  என்றே  நினைக்கிறேன்”, என  காலிட்  கூறினார்.