இது என்ன மாயம் – திரை விமர்சனம்

peijLnbechhgj_mediumநண்பர்களோடு சேர்ந்து நாடகம் நடத்தி வருகிறார். இதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால் உன்னால் முடியும் தம்பி என்னும் வெப்சைட் மூலம் காதலர்களை சேர்த்து வைக்கும் தொழில் செய்து வருகிறார்.

இதில் முதல் காதல் வெற்றி பெற மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்நிலையில் நவ்தீப், விக்ரம் பிரபுவிடம் தான் கீர்த்தி சுரேஷ் என்னும் பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை சேர்த்து வைக்கும்படியும் கூறுகிறார். ஆனால், விக்ரம் பிரபுவோ, நவ்தீப் காதலிக்கும் பெண்ணை அவருடன் சேர்த்து வைக்க மறுக்கிறார்.

நவ்தீப் காதலிக்கும் பெண்ணான கீர்த்தி சுரேஷும், விக்ரம் பிரபுவும் கொச்சி கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள். அப்போது அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து அதை வெளிப்படுத்த முடியாமல் பிரிந்திருக்கிறார்கள். இந்த காரணத்தால்தான் விக்ரம் பிரபு நவ்தீப்பிற்கு உதவ மறுக்கிறார்.

இறுதியில் விக்ரம் பிரபு நவ்தீப்பிடம் கீர்த்தி சுரேஷை சேர்த்து வைத்தாரா? விக்ரம் பிரபுவின் கல்லூரிக் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபு முந்தைய படங்களை விட இப்படத்தில் அப்பாவியாக நடித்திருக்கிறார். நண்பர்களுடனே அதிக காட்சிகளில் இருக்கிறார். இவரை விட நண்பர்களே அதிகம் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்திருக்கும் முதல் படம் இது. படம் முழுவதும் மாடர்னாக வந்து மயக்குகிறார். இவர் சிரிக்கும்போது உதட்டோரத்தில் விழும் குழியில் ரசிகர்கள் விழுவது நிச்சயம்.

விக்ரம் பிரபுவின் நண்பர்களாக வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஜீவா என அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சார்லி சில காட்சிகளே வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார். நாசருக்கு இப்படத்தில் அதிகம் வாய்ப்பில்லை.

காதல் கதையை மையமாக வைத்து களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் விஜய். இதில் காட்சிகளை பார்க்கும்போது முந்தைய தமிழ் சினிமா படங்களின் காட்சிகளை ஞாபகப்படுத்துகிறது. திரைக்கதை மிகவும் மெதுவாக செல்கிறது. ஒரு சில காட்சிகள் ரிப்பீட் ஆகும்போது போரடிக்கிறது. ஆனால் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் அருமையான காதல் கதையை தந்திருக்கிறார். ரொமான்ஸ் படத்தை இவ்வளவு மெதுவாக சொல்லியிருக்க தேவையில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. அதிலும் ‘இருக்கிறாய்…’ பாடல் மனதில் பதிகிறது. பாடலை நீரவ் ஷாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.

மொத்தத்தில் ‘இது என்ன மாயம்’ காதல்மயம்.

-http://tamilcinema.news