#TangkapNajib பேரணிக்கு முன்னதாக போலீஸ் குவிப்பு

sogoகோலாலும்பூரில்  #TangkapNajib (நஜிப்பைக் கைதுசெய்) பேரணியை  ஒடுக்குவதற்காக  போலீசார்  நிறைய குவிக்கப்பட்டுள்ளனர்.

சுமார்  80  போலீசார்  ஆர்ப்பாட்டம்  தொடங்குவதற்கு  அரை  மணி  நேரத்துக்கு  முன்னதாக பிற்பகல்  மணி  1.30க்கு    ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஒன்றுகூட  திட்டமிட்டிருக்கும்  சோகோ  விற்பனை  மையத்தில்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தனர்.

சோகோ  மாலுக்கு  எதிரில்  மூன்று  போலீஸ்  வாகனங்களும்  நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளன.

பேரணி  நடந்தால்  பேரணி  ஏற்பாட்டாளர்களைக்  கைது  செய்யப்போவதாக  கேஎல்  போலீஸ்  துணைத்  தலைவர்  லாவ்  ஹொங்  சூன்  எச்சரித்திருப்பதாக  பெர்னாமா  கூறியது.

பேரணிக்கு  முன்னதாக  பேரணிக்கு  ஏற்பாடு  செய்தவர்களான  சமூக  ஆர்வலர்கள்  ஆதம்  அட்லி அப்துல்  ஹலிம், மந்திப்  சிங், சுக்ரி  அப்ட்  ரஜாப் ஆகியோர்  நேற்றே  கைது  செய்யப்பட்டனர்.

இன்னொரு  சமூக  ஆர்வலரான  ஹிஷாமுடின்  ரயிஸ்  இன்று  பிற்பகல்  கைது  செய்யப்பட்டார்.

#TangkapNajib  பேரணிக்கு  ஏற்பாடு  செய்திருப்பது  டெமி  மலேசியா  அமைப்பு. ஊழல்களுக்காகவும்  அதிகாரமீறல்களுக்காகவும்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கைது  செய்ய  கோரிக்கை  விடுப்பதற்காக இப்பேரணி  ஏற்பாடு  செய்யப்பட்டிருக்கிறது.