முகமட் ஹசான்: நெகிரி செம்பிலானில் எல்லாம் அம்னோவுக்கே வேண்டும்

நெகிரி செம்பிலான் சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் பாரிசான் பங்காளிக் கட்சிகளின் உதவி இல்லாமல் அம்னோ கைப்பற்ற முடியும் NSumnowantsallஎன்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று கூறினார்.

பிரச்சனைகளில் சிக்கித் தத்தளிக்கும் பாரிசான் பங்காளிக் கட்சிகளை அவற்றின் போக்கிற்கே விட்டு விடுவோம்.

அவை செத்துத் தொலைய விரும்பினால், அப்படியே ஆகட்டும் என்றாரவர்.

14 ஆவது பொதுத் தேர்தலில் அவற்றின் கோரிக்கைகளை ஏற்கக்கூடாது என்று தாம் நஜிப்பை கேட்டுக்கொள்ளப் போவதாக ஹசான் கூறினார்.

“மாறாக, மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அனைத்து தொகுதிகளையும் அம்னோவுக்கு கொடுக்க வேண்டும்”, என்று இன்று காலை சிரம்பான் அம்னோ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானில் அம்னோவை தவிர இதர பாரிசான் பங்காளிக் கட்சிகள் கிட்டத்தட்ட முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டன.

பாரிசான் வென்ற 22 இருக்கைகளில் ஜெரம் பாடாங் தொகுதியில் மஇகாவின் எல். மாணிக்கம் வெற்றி பெற்றார். மற்ற 21 இருக்கைகளும் அம்னோவுடைதாகும் என்று கூறிய ஹசான், அந்தத் தொகுதியும் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தில் மொத்தம் 36 இருக்கைகள் இருக்கின்றன.