முகைதின்:1எம்டிபிமீது வாயைப் பொத்திக் கொண்டிருக்க மாட்டேன்

muhi1எம்டிபி போன்ற  விவகாரங்கள்   மக்கள்  சம்பந்தப்பட்டவை.  அதனால்  வாயைப் பொத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்கிறார்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்ட  முகைதின்  யாசின்.

குளுவாங்  அம்னோ தொகுதி  ஆண்டுக் கூட்டத்தில்  உரையாற்றிய  முகைதின்  தாம்  குற்றம்  ஏதும் செய்ததாகக்  கருதவில்லை  என்றார். தம்  நண்பர்கள்  அம்னோ  துணைத்  தலைவர்  பதவிக்கும்  ஆபத்து  வரலாம்  என்று  எச்சரித்திருப்பதாகவும்  அவர்  சொன்னார்.

“அவர்கள்  சொன்னார்கள் ‘டான் ஸ்ரீ, இப்போது  நீங்கள்  துணைப் பிரதமர் அல்ல  அதனால்  (1எம்டிபி பற்றி) நல்லதாக  பேசுங்கள். உங்கள்மீது  தவறு காண்பதற்காகவே  சிலர்  இருப்பார்கள். அவர்களால் துணைத்  தலைவர்  பதவிக்கும் ஆபத்து  வரலாம்’”என்று.

“நான்  வாயை  மூடிக்  கொண்டு  இருக்க  முடியாது  என்றேன். துணைத்  தலைவரான  நான்  ஏன் அப்படி  இருக்க  வேண்டும்? பேசித்தான்  ஆக வேண்டும்”, என்று  முகைதின்  அழுத்தம் திருத்தமாகக்  கூறக்  கூட்டத்தினர்  கரவொலி  எழுப்பிப்  பாராட்டினர்.