அம்னோ அடிநிலை உறுப்பினர்கள்: பிரதமர்மீது பாசம் உண்டு, ஆனால், ரிம2.6 பில்லியன் என்னவானது?

memபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், கடந்த  வார  இறுதியில் கட்சியில்  3மில்லியன்  உறுப்பினர்களின்  ஆதரவு  தமக்கிருப்பதாகக்  கூறிப்  பெருமைப்பட்டுக்  கொண்டார்.  ஆனாலும்,  கட்சியின்  அடிநிலை  உறுப்பினர்களில்  சிலர்  1எம்டிபி  குற்றச்சாட்டுகள்மீதான  உண்மை  தெரிய  வேண்டும்  என்கிறார்கள்.

“பிரதமர்  அவருடைய  கணக்கில்  போடப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம2.6 பில்லியன் பணம்  என்னவானது  என்பதைப்  பொதுமக்களுக்குச்  சொல்லத்தான்  வேண்டும்.

“பணம்  எங்கே  போனது. மக்களுக்கு  விளக்கமளிக்க  வேண்டும்.

“அதைத்தான்  மக்கள்  தெரிந்துகொள்ள  விரும்புகிறார்கள்”, என  லெம்பா  பந்தாய்  அம்னோ  உறுப்பினர்  முகம்மட்  நஜிப்  அஹ்மட், 51,  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அத்தொகுதி  கட்சித்  தலைவரை  ஆதரிப்பதாகக்  கூறிய  இன்னொரு  உறுப்பினர்  குற்றச்சாட்டுகள்தாம்  உண்மையா  பொய்யா  என்று  தெரியவில்லை  என்றார்.

“அடிநிலை  உறுப்பினர்கள்  வலுவாகவே  ஆதரிக்கிறார்கள்”, என  மிமி  ஜரியா  ஹனாபி,52, கூறினார்.

“அடிநிலை  உறுப்பினர்கள் அப்படித்தான்  பிரதமர்மீது  பாசமாக  இருக்கிறார்கள்.

“ஆனால்,  மற்றவர்கள்  பிரதமர்  பொல்லாதவர்  என்கிறார்கள். உண்மை  என்னவென்பது  எங்களுக்குத்  தெரியவில்லை”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.