அரசியல் பதவிக்காக இன, மொழி சர்ச்சைகளை கிளப்புவது அமைச்சர்கள்தாம்

contentwriting_1வருபவர்கள் எல்லாம் நாட்டுக்கு நல்லதை செய்யத்தான் மாற்றங்கள் என்கிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் மொழி கலாச்சாரத்தில் கை வைக்க இவர்களுக்கு என்ன மொழி தகுதி உண்டு?

இந்த நாட்டில் ஒரு மொழி கல்வி இருந்தால்… இன ஒற்றுமை வந்துவிடும் என்ற புதிய கம்பை ஊன வந்திருக்கிறார் ஹமிட் என்ற ஜகிட் …இவரின் பூர்வீகம் இந்தோனேசியா இப்போது மலாய் பேசுகிறார்.
இவரின் ஆங்கிலம் எனக்குததெரியாது. நானும் வெள்ளி மாநில பெர்ணம் நதி வழி ஊதான் மேளிந்தாங் போய் கடல் வழி பாகன் டத்தோ முகாம் தொட்டு  இந்தோனேசியா போனவன்தான்.

நாட்டின் அதிரடி பதவியில் துணை பிரதமர் ஆனதும் முதல் முத்தம். ஒரு மொழி புது சிற்பியாக முயல்கிறார். உளி அடிக்கு பின்தான் கல்லும் சிலையாகும். கண்ணில் தூசி பட்டு நொல்லையாகமல் இருந்தால் சரி. இப்பொது அந்த ஒரு மொழி இன விசைக்கு போவோம்.

ஆணி வரை ஆட்டினால் அடி வயிறு கலங்கும்.இதனால் அரசியலில் பேரு போட முடியும். அமைச்சர் பதவிகள் பிற அரசு பதவிகள் எல்லாம் பிரதமர் துணை பிரதமர் வரை போகாலம் என்பது இந்நாட்டு அரசியல் பாரம்பரியமா இருந்துள்ளது. இது தீவிரவாதமா ,புரட்சியா ,நாட்டுப்பற்றா, இன மொழி உரிமையா என்றால் எல்லாம் கலந்த ரோஜாதான் . இப்படி இருப்பவர்களைத்தான் மக்களும் விரும்பி தங்களின் ஆவேச உணர்ச்சியை கொப்பளிகின்றனர் என்ற கடந்த காலன் மஞ்சள் நீராடல் இனியும் பலிக்காது.

மலேசியா உலகிலேயே ஒரு அதிசயமான நாடு என உலக மக்கள் சொல்லவதாக கேள்விபபட்டுள்ளோம், இந்நாட்டில் வாழாத இனமும் இல்லாத மொழியும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மொழி இன பிரளயம் கண்ட ஒரு கலப்பு கலாச்சார மண்டலம். அல்லது பன்மொழி அகராதிகள் இருக்கும் தேன் கூண்டு எனலாம்.

உலக நடப்பில் இனம் ,மொழி ,சமயம் இவைகளை உரசியே கலாச்சாரம் உப்பி நிற்கும். Religion ,Language and Race  A social Change  Among Indigenous people in Malaya என்ற புத்தகம் கண்ணில் பட்ட அவஸ்தைதான் இந்த கட்டுரை.

டெவான் பகசா 1991 வெளிட்டு 2011 ரில் அங்கே 2 வெள்ளிக்கு குவியலில் ஏலத்தில் போன இந்த புத்தகம் Amran Kaasini என்பவரின் ஆய்வு ..இதற்கு என்ன என்று அவசரமா கேற்பது தெரிகிறது.

உங்களுக்கு ஒரு கிரிமிலை  போல எழுதினால் தான் பிடிக்கும் ..இது நமது இலக்கியம் சொல்லும் கதை கட்டுப்பாடு. சரி அந்த இதிகாச படைப்பை நோண்டாமல் இன்றைய மொழி விரிசலுக்கு வருகிறேன்.

நாட்டின் புதிதாக துணை பிரதமர் பதவி ஏற்றதும் முக நூல் வேண்டாம், ..ஒரு மொழி கல்வி திட்டம் என்கிறார். பிரதமரின் சிக்கலே சட்டிக்குள் வெம்பும் வேளையில்  புதிய அடுப்பில் கருவாடு சுட , எரிக்க வந்துள்ளார் துணை பிரதமர் அவர்கள்.

முன்னாள் துணை பிரதமரும் முன்னாள் கல்வி அமைச்சருமான முகிடின் அவர்கள்  கல்வியில் 2013 -2025 கலியுக கல்வியில் கைவைத்து ஆள் காட்டி விரலை உடைததுக்கொண்டார். நாட்டின் கடந்த கால பிரதமர்கள் துணை பிரதமர்கள் எல்லாம் கல்வியில், மொழியில் கைவைத்தவர்ககள்தாம். நன்மைக்கோ, கொடுமைக்கோ போகட்டும் அனால் ஹமிட் அவர்கள் உலக நடப்புக்கு வேட்டு வைக்கும் அளவுக்கு இந்நாட்டில்  ”ஒரு மொழி கல்விதான் இன ஒற்றுமை ஒட்டவைக்கும்” என்ற புதிய  பசையை சுய இன பசியை உலப்புகிறார்.

நாட்டின் பல மில்லியன் வெளியூர் மக்களை உள்ளுக்கு கொண்டுவந்த உள் துறை அமைச்சரும் இவர்தான். நாட்டில் பல ஆயிரம் ஆங்கிலம் சார்ந்த பல்கலை கழகங்களும் கல்வித்துறை வணிக வளப்பமும் பீடு நடைபோடும் வேளையில் இப்போது புதிய முக்காடும்  தனி முகமூடியும் தனி மொழிக்கு தேவையா என்று நான் கேற்கிறேன் ?

நான் தமிழ்வழி வந்த ஆங்கிலம், மலாய் மொழி முமொழி படித்தவன். நாம் உணர்வுள்ள தமிழர்கள்.  இதைத்ததான் தொடர்வோம். அதுபோலவே சீனர்கள். மலாய்க்காரர்கள் நிலையோ இரண்டு மொழிதான். அதிலும் ஆங்கிலாம் இன்னும் தக்க நக்க விரிவுரை ஆசாமிகளை எல்லாம் பார்க்கிறோம். தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இந்த ஒரு மொழி கல்வி உலக கல்வி முறைக்கு அதாவது unesco வின் உலக கல்வி உரிமைக்கு விடும் சவாலாக படுகிறது.

நாட்டின் அரசியல் பலத்தை பெற அம்னோ ஆசிரிய பேராளர்கள் வழி .கல்வியில்தான் கை வைக்க வேண்டும் என்ற மோப்பம் புரிகிறது. ஆனால் பாரிசான் நேசனல் பங்காளிகள் இதை ஏலமிட்டு பங்கு போட
அவர்கள் ஒன்றும் அம்னோ பகாகியான் பூச்சிகள்அல்ல !

மலேசியர்களின் இன பூசலுக்கு மொழியை வைத்து ஆப்பு அடிக்க முயலும்  துணை பிரதமரின்  எண்ணம் காலத்துக்கு ஒவ்வாத ஒப்பாரியாகும். பிரதமர் அமைதிக்காக்கும் இந்த சிக்கலில் இவர் மூக்கை நுழைக்க என்ன காரணம். புகைவது எரியத்தான் அதனால் மொழி இயற்கைக்கு  எந்த புகையையும் நெருப்பையும் அணைக்கும் ஆற்றல் மிக்கது.  ஐம்புலன்களை ஆய்ந்து, இந்த பஞ்சபூத சக்தி மிக்க மொழிகளில் கைவைக்காமல் இருப்பதே மேல் என அறிவுரை கூற விருபுகிறேன்.

மன நலம் மண் உயிக்கு ஆக்கம்

இன நலம் எல்லாப்புகழும் தரும். –குறள்

இந்த மண் உயிர்களின் மொழி உணர்வில் அரசியல் வேண்டாம்.
உன் அரசியல்  நிரந்தரமல்ல ! பல்லின இந்நாட்டில் தனி   இன நலமும் மொழி நலனுமில்லை ! எங்கள் மொழியில் இன வளப்பத்தில்
கை வைக்க யாருக்கும் உரிமையும்  இல்லை. இன்னும் மிச்சமிருக்கிறது. மீண்டு வருவோம்.

”பல நேரங்களின் மீன் கரைக்கு வருகிறது ..சில நேரங்களில்
தூண்டிலே நீருக்குள் போகிறது”..எனக்குப  பிடித்த பச்சை பாலனின்
கவிதை வரிகள்.

Pon Rangan
[email protected]