திரெங்கானு சுல்தானின் சிற்றப்பா பாஸிலிருந்து விலகினார்

t'ganuசுல்தான்  திரெங்கானு  சுல்தான்  மிஸான்  சைனல்  அபிடினின்  சிற்றப்பா  தெங்கு  ஸ்ரீ  படுகா  ராஜா  தெங்கு  இப்ராகிம் பாஸ்  கட்சியிலிருந்து  விலகியுள்ளார்.

ஆறாண்டுகளாக  பாஸ்  உறுப்பினராக இருந்த தெங்கு  இப்ராகிமுக்கு  கடந்த  கட்சித்  தேர்தலில்  முற்போக்காளர்கள்  நிராகரிக்கப்பட்டது  பிடிக்கவில்லை. அதனால்  அதிலிருந்து விலகினார்.

தெங்கு  இப்ராகிம்  கோலா  திரெங்கானு  எம்பி  ராஜா  கமருல்  பஹ்ரேன் ஷாவின்  உறவினருமாவார்.

கோலா  திரெங்கானு  பாஸ்,  ராஜா  கமருலுடன்  உறவுகளை  அறுத்துக்  கொண்டிருக்கிறது.  ஆனால்,  அதற்கும்  தாம்  கட்சியிலிருது  விலகுவதற்கும்  சம்பந்தமில்லை  என  தெங்கு  இப்ராகிம்  கூறினார்.

ராஜா  கமருல்  கெராக்கான்  ஹராபான்  பாரு  திரெங்கானுவின்  தலைவருமாவார்.