ரிம2.6 பில்லியன் கொடை வழங்கியது ஒரு குற்றச் செயலல்ல

donateபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் அம்னோமீது  நம்பிக்கை கொண்ட  ஆதரவாளர்களிடமிருந்து  ரிம2.6 பில்லியனை  நன்கொடையாக  பெற்றது  ஒரு  குற்றச்செயல்  அல்ல  என்கிறார்  கைரி  ஜமாலுடின்.

“மலேசியாவில் அரசியல்  கட்சிகள்  ஆதரவாளர்களிடமிருந்து  நன்கொடை  பெறுவதைத்  தடுக்கச்  சட்டமில்லை”, என  அம்னோ  இளைஞர்  தலைவர்  கூறினார்.

எனவே, நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன்  இருப்பது  குற்றம்  என்ற  பேச்சுக்கே  இடமில்லை  என  கைரி  குறிப்பிட்டார்.