பிரதமர் கலந்துகொள்ளும் தொகுதிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் எதைப் பற்றியும் வினவலாம்

pasirஞாயிற்றுக்கிழமை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஜோகூர்  பாசிர்  கூடாங்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தைத்  தொடக்கி  வைக்கிறார்.

தொகுதி  உறுப்பினர்கள் அக்கூட்டத்தை அம்னோ  எதிர்நோக்கும்  பிரச்னைகளை  எழுப்புவதற்கான ஒரு  தளமாக  பயன்படுத்திக்  கொள்ளலாம்  என  அம்னோ  இளைஞர்  உதவிச்  செயலாளர்  நூர்  அஸ்லீன்  அம்ப்ரோய்ஸ்  கூறினார்.

“உறுப்பினர்களே கட்சியின்  நாடி நரம்புகள். அடிநிலை  உறுப்பினர்களின்  உணர்வுகளை வெளிப்படுத்துவது  பேராளர்களின்  பொறுப்பாகும்.

“அப்படிச்  செய்வதால்  எழுப்பப்படும்  விவகாரங்களை  எல்லாப்  பேராளர்களும்  குடும்பமாக  இருந்து  விவாதிக்க  இயலும்”, என  அவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

பாசிர்  கூடாங்  ஜோகூர்  மந்திரி  புசார்  முகம்மட்  காலிட்  நோர்டினின்  தொகுதியுமாகும்.